Posts tagged ‘அறிவிப்பு’

காலப்பெட்டகத்தில் கனவுகளாய் செல்லாக் காசுகள்..

நண்பர் சொல்கிறார் இன்னொரு நண்பரிடம்..உங்க பையனுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கம் கற்று தந்திருக்கிறீர்களா?ஆம் என்பதாய் அவர் பதில்..அப்படியாயின் உண்டியலை  உடைத்து 25 பைசாவை செலவழிக்கப் பாருங்கள்.25 பைசா ,ஜூன் 30 க்கு பின், செல்லாக் காசாக அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதுதான் நண்பர் அந்த நண்பருக்களித்த அறிவுரை.அதைத் தொடர்ந்துதான் அந்தக் கால காசுகளைப் பற்றிய நினைவு அலசல்கள் பரபரப்பாய் பற்றிக் கொண்டது நண்பர்களிடம்..

ஒரு நண்பர் சொல்கிறார்..5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..அப்பா பள்ளிக்கு செல்லும் போது பத்து பைசாவை என்னிடம் கொடுத்து நீயும்,தம்பியும் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்பார்!அது ஒரு கனாக்காலம்…என்கிறார் பெருமூச்சோடு!

அடுத்தவர் ஆரம்பிக்கிறார்…அது பத்து பைசாவைப் பற்றிய நினைவு..நினைவிருக்கிறதா உங்களுக்கு ,சரியான வட்டமாக அல்லாமல் பூவின் இதழ் போன்ற வட்டத்தில் அக்கால பத்து பைசா..ரயில் தண்டவாளத்தில் நசுங்க வைத்து ரசித்திருக்கிறேன்.பைசாக்களை பால்பேப்பர் நோட்டில் வைத்து பென்சிலால் தேய்த்து அதன் அச்சு எடுத்திருக்கிறீர்களா..அதெல்லாம் அக்கால விளையாட்டு.மோதிரம் செய்த கதையும் உண்டு என்கிறது அவரின் நினைவலைகள்.

அடுத்தவர் வார்த்தையில் 20 பைசா நிழலாடுகிறது..20 பைசா பற்றி அவர் நினைவு படுத்துகையில் பலரின் நினைவுகளில் அதன் அமைப்பு மறந்து போயிருக்கிறது…அவர் இருபது பைசாவில் சேமியா ஐஸ் வாங்கிய சுவையான நினைவுகளை அசை போடுகிறார்.பைசாவில் h ,m , t தனி தனி காயின்களை ஒன்று சேர்த்து கொடுத்தால் hmt வாட்ச் தருவார்கள் என்று யாரோ கதை கட்டிகளின் கதைகளை ,அக்காலத்தில் நம்பி இருப்பதாகவும் வெம்பி சொல்கிறார்.பைசா வைத்து பைசா கோபுரம் கட்டிய கதையும் இடையில் வந்து போகிறது..

இப்படியாய் நீள்கிறது காணாமல் போன பழைய 50 பைசா,1 ரூபாய் நோட்டு,பளபள சின்ன பத்து பைசா நினைவுகள்,அதனை சுற்றிய கதைகள்..நான் குழந்தையாக இருந்தபோது,என் தாத்தா 1 பைசா,2 பைசா,1 /2 அனா  நினைவுகளைப் பற்றி சிலாகித்ததும் என் நினைவிலிருந்து மறையாமல் இன்னும் நிழலாடுகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப,நாணயங்களின் மதிப்பிற்கேற்ப அவை மாறவே,மறையைவோ செய்கின்றன.அது காலத்தின் கட்டாயம்..இருந்தாலும்…அந்த பழைய பைசாக்களை பார்க்கும் போது  அது நம்மில் உண்டாக்கும் சிலிர்ப்பு மாறுவதில்லை.அக்கால காசுகள் இக்காலத்தில் செல்லாக் காசாகலாம்..ஆனால் அதனைப் பற்றிய நினைவுகள் நம்மிடத்தில் எப்போதும் செல்லாமல் போவதில்லை!!இனிமையான நினைவுகளை சேமித்துக் கொண்டே இருக்கின்றன!

மார்ச் 4, 2011 at 11:41 முப 3 பின்னூட்டங்கள்

கள்ள வோட்டுப் பெட்டியும்,காணாமல் போன பரீட்சை பேப்பரும்..

வாழ்க்கையின் பாதையை தீர்மானிக்கப்போகிற தேர்வு…+2 தேர்வு..

ஒரு பள்ளியில் முதலாம் தாள் கு பதிலாக இரண்டாம் தாள் தரப்பட்டதாம்..

இன்னொருப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வு வினாத்தாளை ஸ்டேட் போர்டு மாணாக்கர்களுக்கு கொடுத்தார்களாம்.

இப்போது ..முசிறியில் விடைத்தாள்கள் காணாமல் போய் விட்டனவாம்..விசாரிக்கிறோம்..

விடைத்தாள்கள் கிடைக்காவிடில் மாணாக்கர்களுக்கு திரும்ப தேர்வு நடக்கும் என அரசின் அறிவிப்பு…

தேர்வு முடிந்த களிப்பில், விடுமுறையில் படிப்பின் வாசனையை கொஞ்சம் தூரம் தள்ளி ,துள்ளிய மாணாக்கர்களை திரும்ப தேர்வுக்கு அழைக்கும் போது அவன் மனநிலை என்னவாக இருக்கும்..?நன்கு படித்து தேர்வை எதிர் கொண்டோர் கூட மீண்டும் நினைவு படுத்தி எழுதும் மனநிலையில் இருப்பார்களா???மீண்டும் தேர்வு என்கிற போது அந்த மாணாக்கர்களை பயம் அல்லவே பற்றிக்கொள்ளும்.அவர்களின் எதிர்காலம் எப்படி சீரழிக்கப் படுகிறது.

யாரின் கவனக்குறைவு??

எப்படி காணாமல் போகும்??

என்ன நடந்தது அங்கே??

பிட் அடிக்க கூடாது…. பறக்கும் படை அமைக்கிறதே அரசாங்கம்..ஏன் விடைத்தாளை கொண்டு வர பாதுகாப்புப்படை இல்லை..

ஒட்டு பெட்டி…கள்ளவோட்டு பெட்டிக்கு கடும் காவல்…பாதுகாப்புக்கு பலம் வாய்ந்த படை…பரீட்சை பேப்பருக்கு???

ஏப்ரல் 10, 2010 at 10:42 முப 3 பின்னூட்டங்கள்

அறிவிப்பு

உன் இரட்டைஜடை

தாவணி கட்டி

பழக்கப் படாத குழந்தை நடை

புதியதாய் அரும்பும்

பரு

முலாம் பூசப்பட்ட

மஞ்சள் முகம்

என்னைப் பார்த்ததில்

திடீரென உன்னில்

ஒட்டிக் கொண்ட நாணம்

பருவம் கண்டதில்

பட்டாம்பூச்சியான விழிகள்

இவையெல்லாம்

நீ வயதுக்கு வந்தவள்

என்றறிக்கை விடுக்கவில்லை.

நீ..இனி எனக்கானவள்

என்றல்லவா அறிவிக்கின்றன..

மார்ச் 27, 2010 at 12:18 பிப 2 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: