Posts tagged ‘அறிவு’

கதவை திற..காற்று மட்டுமல்ல..!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

மூடியுள்ளவரை (முயற்சிக்காதவரை)

எல்லாம்

இருட்டுதான்.

கதவை திற

காற்று மட்டுமல்ல

வெளிச்சத்தோடு

விடியலும்

சேர்ந்து வரும்!

ஜூலை 6, 2011 at 11:46 முப 8 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும்!

 • உன் விரல் பற்றி

நடந்துதானே

என் முதுகு தண்டு

நிமிர்ந்தது!

 • நீ தோளில் சுமந்து

காட்டிதானே

உலகம் என்னில்

விரிந்தது!

 • வீட்டுக்குள்ளே

உலகம் கண்டேன்.

வெளியுலகம்

காட்டியவன் நீ!

 • பாசத்தை தாயூட்ட

பக்குவத்தை நீயூட்ட

அன்பை அவள் பகிர

அறிவை நீ பகிர்ந்தாய்!

 • பத்து மாதம் பாரம்

தாய் சுமந்தாள்

எமை வளர்த்தெடுக்க

இன்னமும் சுமக்கிறாய்

நீ பாரம்.

 • நீ என்னை கருசுமந்து

பிரசவிக்காது

தாயுமானவன்!

 • வெற்றிபெற்ற

மனிதருக்குப் பின்னால்

ஒரு பெண்ணிருப்பாள்

என்று

ஏடெழுதி போயினர்

ஏராளமானோர் !

உண்மை ஒன்றை

உரக்க சொல்வேன்

ஆணித்தரமாய்

அடித்து சொல்வேன்

ஒவ்வொரு மனிதனின்

வெற்றிக்குப் பின்னாலும்

ஒரு தந்தையின் பங்கு

நிச்சயம் உண்டு!

———————————————————————————————————————-

தந்தையர் அனைவருக்கும்,தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

———————————————————————————————————————–

ஜூன் 19, 2011 at 9:13 முப 14 பின்னூட்டங்கள்

தன்னைமறந்த நிலையில் தடம் மாறி !


 • சாயங்கால வேலை

சாலையின் ஓரம்

ஏதோ ஓர் சிந்தனையில்

எங்கோ

நடந்துக்கொண்டிருக்கிறேன்.

என் அருகாமையில்

சைக்கிளில் வந்தவன்

சபிக்கிறான் என்னை.

“சாவு கிராக்கி

ரோட்ட பாத்து போடா”

 • என்னை கடந்து

தன்னை மறந்து

சைக்கிளில் போனவனை

எங்கிருந்தோ வந்த

பகட்டு பைக்கு காரன்

மடக்கி கேட்கிறான்.

“மடையா ஒழுங்கா வண்டி ஓட்ட

உனக்கு தெரியாதா?

ரோட்ட அளக்குற!”

 • மடக்கி கேட்டு

பறந்த பைக்கை

விரைந்து பிடித்த

மகிழ்வுந்துகாரன்

மானம் போக

மரியாதையின்றி கேட்கிறான்.

“பாத்து ஓட்ட மாட்டியா?

வயித்துக்கு  சோறு தானே

திங்குற..?”

 • மகிழ்வுந்து ஓடிட

வந்து சேருகிறது

அதனருகில் பேருந்து.

பேருந்து ஓட்டுனர்

பெரிதாய் கத்துகிறார்.

“கார் ஓட்டினா

கண்ணு முன்னு தெரியாதாடா

பொறுக்கி ராஸ்கல்”..

 • இப்படியாய் நீள்கிறது

சங்கிலித் தொடராய்..

தன் தவறை மறந்துவிட்டு

தடம் மாறி ஓ(ட்)டுகின்ற

அனைவரின் அர்ச்சனைகளும்!

மே 26, 2011 at 10:40 முப 10 பின்னூட்டங்கள்

முள்ளிவாய்க்காலுடன் முடியாது!

இதுபோன்றொரு

நாளில்தான்

எம் சொந்தங்கள்

சோறின்றி பட்டினியாய்

உறக்கமின்றி ஊர் ஊராய்

உறவுகளை இழந்து

உரிமைகளை துறந்து

ஓய்வின்றி உழன்று

கால்கடுக்க நடந்து

கன்னி வெடிகளில் சிக்கி

பதுங்குகுழிகளில் புதைந்து

உறுப்புகள் ஆங்காங்கே

சிதறி விழுந்திட

இருக்கின்ற உயிரையாவது

எடுத்துக் கொண்டு

போவோமென

ஓடோடி வந்தனர்

இந்த உலகத்திடம்

உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு!

அவர்கள்

வரும் வழியெங்கும்

பிணங்களின் குவியல்.

துறந்த உயிர்களின்

துர்நாற்றம்.

முலை அறுத்து

கொல்லப்பட்ட பெண்.

இல்லாத மார்பில் பால் குடிக்க

எத்தனிக்கும் குழந்தை.

பிறப்புறுப்பில் துப்பாக்கி

துளையிட்டு

தொலைந்த பெண்போராளி.

சுமந்து பெற்ற பிள்ளை

முன்னே

ராணுவ ராட்சசன்களை

சுமந்த அம்மா.

அம்மா முன்னே

அம்மனமாக்கப்பட்ட

மகன்.

தந்தை பார்க்க

கற்பழிக்கப்பட்ட

மகள்.

உயிருடன் பிடித்து

கண்களை கட்டி

சுட்டுக் கொல்லப்பட்ட

இளைஞர்கள்.

எவ்வளவோ கத்தியும்

கேட்கவில்லை

இவ்வுலகின்

செவிட்டு செவிப்பறைகளுக்கு

எம்மினத்தின் குரல்.

எங்கேனும் பார்த்திருக்குமோ

இவ்வுலகம்

இப்படியோர் அவலம்.

முள்ளி வாய்க்காலில் முடிந்துவிட்டது

எம் வரலாறென

மூச்சு விடுகிறாயா

சிங்களனே ..

பொறுத்திரு..

உன் சிரம் கொய்யும்

காலம்

சீக்கிரம் வரப்போகிறது!

மே 18, 2011 at 10:22 முப 6 பின்னூட்டங்கள்

கருப்பை கடந்து போகாதீர்!

கரும்பலகையில் இருந்துதான்

பலரது அறிவு

வெளுக்க துவங்குகிறது!

கருப்பை அபசகுனமென்று

கடந்து போகாதீர்!

ஏப்ரல் 4, 2011 at 11:43 முப 9 பின்னூட்டங்கள்

Older Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,211 hits

%d bloggers like this: