Posts tagged ‘அழகு’
தெருவோரத்தில் பேஷன் ஷோ !
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
கேட் வாக் போக
ஆளில்லை
இருந்தும் கண்டேன்
தெருவோரத்தில்
ஒரு பேஷன் ஷோ !
தண்ணீர்…கண்ணீர்!
பணக்கார பங்களாவில்
அழகுக்காய்
கொட்டுகிறது தண்ணீர்!
அருகாமை குடிசைகளில்
தண்ணீர் வேண்டி
அரசுக்கு மனுபோட்டு
இயலாமையில் மக்கள் கண்ணீர்!
உலக அழகியை கவர்ந்து விட்டேன்!
உன்னை படம் பிடித்த
கேமரா
பரவசம் கொள்கிறது
உலக அழகியை
உட்கவர்ந்து விட்டேனென்று!
ஒற்றைப் பாலின ஈர்ப்பு!
பூத்து குலுங்குகின்ற
பூவை
காய்த்து குலுங்குகின்ற
பாவை
காதலுடன் நோக்க
தன்னை அர்ப்பணித்து
தலை(வியிடம்)
சரணடைகிறது பூ!
இருவருமே வாசம்
நிறைந்தவர்களாய்
வெட்கம் கொண்டு
கன்னம் சிவந்தவர்களாய்
இதழில் தேன்
சுரந்தவர்களாய்
மோகம் கொண்டு வாடி
வாடி என்றழைக்க
தலைவன் வருகை
எதிர்ப்பார்தவர்களாய்!
இருந்தும்
ஒற்றைப் பாலினத்தில்
இருவருமே ஈர்க்கப் படுவது
இயற்கையின் அதிசயம்தான்!