Posts tagged ‘உண்மை’

நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!

 

மலரை சுவைக்க வரும்

வண்டுபோல என் வருகை ஏனோ

சாதுவாயிருக்கிறது!

பின் பூனையிடம் மாட்டிய

எலிபோல விளையாட்டு

வேகமெடுக்கிறது!

புலியென மாறி பாய்ந்து

வெறிகொண்டு மானை சிராய்த்து

கடித்து வைக்கிறேன்

கொஞ்சம் மூர்க்கமாய்!

யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு

உன்னை தாக்கி மகிழ்கிறேன்

கொடூரத்தின் உச்சமாய்!

நீ தாக்குதலை எதிர்கொண்டு

தயங்காமல் நிற்கிறாய்

நிராயுதபாணியாய் நின்றபடி

இன்னும் தாக்க சொல்கிறாய்!

சாது போல இருந்தவள் என்னை

மோத சொல்லி கேட்கிறாய்!

தாக்குதலை தொடுத்து விட்டு

குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்

பூவென இருந்து கொண்டு

நீ புலியை சாய்த்து  வெல்கிறாய்!

என்ன மாயம் செய்தாயோ

நான்கு சுவற்றுக்குள்

நடக்கும் போரில்!

ஒக்ரோபர் 18, 2011 at 10:39 முப 1 மறுமொழி

ஒப்பற்ற தியாகமே!உண்மை உண்ணாவிரதமே!!

உண்ணாவிரதம் இருந்து

யுகம் வென்றவனே

உண்மைக்கு போராடி

உயிரை துறந்தவனே

கனலென எரிந்த உணர்வை

உலகுக்கு காட்டி

கேணல் ஆனவனே!

லெப்டினன் கேணல் திலீபனே!

உன்னை எப்போதும்

தமிழினம் மறவாது!

ஒப்பற்ற தியாகமே !உண்மை உண்ணாவிரதமே !!

உனக்கு எம் வீரவணக்கம்!!!

செப்ரெம்பர் 26, 2011 at 11:56 முப 1 மறுமொழி

கடல் மீது கொண்ட காதல்!

  • நெடுநாட்களாய் கடல்பார்க்க

ஆசைக்கொண்டு

கடல் மீது தீராக் காதல்

கொண்டவளாய் நான்!

  • முதன்முதலாய் கடல்

பார்க்க காலம் வந்தது

காதலனே

உன் அருகாமை நின்று!

  • கடலினை பாராது

உன்னையே

பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கண்ணிமைக்காமல்!

  • அலை வந்து

நனைத்த மணலில்

நம் காதல்

எழுதி வைத்தேன்.

எக்காலம் ஆனாலும்

இக்காதல் அழியாது

என்று!

  • அடுத்தநொடி வந்திட்ட

அலை வந்து

அழிக்கிறது

எழுதிவைத்த நம் காதலை!

  • அலை கொண்ட பொறாமை

என்றப்போ எண்ணிட்டேன்.

அப்புறமாய் அறிந்திட்டேன்

நம் காதல் இடைவெளியில்

எங்கேயோ நீயும்

வெகுதொலைவில் நானும்!

  • நாம் மிதித்த கடலலையை

நான் மட்டும் மிதிக்க மாட்டேன்

நீயும் நானும் சேர்ந்தெப்போ

மிதிப்போமென்று

பசலை நோய் வந்தவளாய்

பார்த்திப்போ காத்திருக்கிறேன்!

  • பறந்து விரிந்த

கடற்பரப்பை

பார்க்க நான் கொண்ட ஆசை

பறந்து நிறைந்த நம்

காதலாலே

பாராமலே போகிறதடா!

ஜூன் 30, 2011 at 11:52 முப 8 பின்னூட்டங்கள்

மூர்ச்சையாக்கும் மந்திரம்!

  • அலைபேசியில்

நம் அரட்டையின்

போதெல்லாம்

உன்னை

முத்தமிட சொல்கிறேன்.

  • முடியாது போ

என்று

முரண்டு பிடித்தபடி

நீயும்

பேச்சின் முடிவில்

நானறியா நேரத்தில்

நச்சென்று வைக்கிறாய்

இச்சொன்று !

  • நீயிட்ட முத்தத்தில்

வரும்

வெறும் சத்தத்தில்

என்னை

மூர்ச்சையாக்கும் மந்திரம்

எங்கு கற்றாயோ நீ!

ஜூன் 15, 2011 at 10:44 முப 8 பின்னூட்டங்கள்

பொருளற்ற கவிதைகள்!

  • திரும்ப திரும்ப

யோசித்தாலும்

திராணியற்று

வருகிறது வார்த்தைகள்!

  • எதைப்பற்றி

எழுதுவதென்று

இயலாமையில்

எதை எதையோ

கிறுக்கி தள்ளுகிறது பேனா!

  • யோசித்து,யோசித்து

எழுதியும்

கருவற்ற பொருளாய்

காகிதங்களின் குவியல்!

  • எழுதிப் படிக்கும் போது

வளமற்று நீள்கிற

வார்த்தைகள்

சீரற்ற எழுத்துக் கோர்வை!

  • மூளை உறங்கிடும்வேளை

வார்த்தை வற்றிப்போய்

வந்து விழுகிறது

பொருளற்ற கவிதைகள்!

ஜூன் 8, 2011 at 10:44 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: