Posts tagged ‘உயிரே’
அவளுக்கின்று பிறந்தநாள்
அன்பின் இலக்கணம் சொல்லி
என்னில் அகம் புகுந்தவள்..
அகம் புகுந்து என்னில்
அகம்பாவம் உடைத்தவள்.
அவளுக்கின்று பிறந்தநாள்
அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.
ஊருக்கு அடங்காதவனை
தன் உறவுக்குள் அடைத்தவள்.
பிற்போக்கு உடைத்தென்னில்
முற்போக்கு விதைத்தவள்.
என் அன்பிற்க்கின்று பிறந்தநாள்
ஆராதித்து மகிழ்கின்றேன்.
கல்லான நெஞ்சிக்குள்ளும்
காதல் மொழி புதைத்தவள்.
களங்கமில்லா என் நெஞ்சை
களவு செய்து சென்றவள்.
காதலிக்கு பிறந்தநாள்
கருணைமொழி கூறுகின்றேன்.
இறுகிக்கிடந்த உளந்தனை
உருகிக் குலைய செய்தவள்.
லப் டப் ஆன ஒலியை
லவ் டப் ஆக்கி எனை வென்றவள்.
உயிர்க் கின்று பிறந்தநாள்
உளமாற போற்றுகின்றேன்.
உமக்கு மணமாயினும்
மறவாது என் நெஞ்சம்.
முதல் காதல் ஆயிற்றே
என் மனம் முழுக்க உன் காதல் வாசமே எஞ்சும்.
என்னவளுக்கு..என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
முதல் காதல்
- நீயும் நானும்
நானும் நீயும்
அருகருகில் -இருந்திட்ட
அக்காலக் கணங்களை
எக்காலம் நோக்கினும்
ஈடேற்ற இயலாது அன்பே!
- காலங்கள் கடக்கலாம்
இளமைமாறி முதுமை
எய்தலாம்.
இன்னொருத்தி எனக்கு
வாழ்க்கைத் துணையாகலாம்.
என் வசந்த காலத்தை
உன்னிடம் மட்டுமே
ஒப்படைத்து விட்டேனடி உயிரே!
- எங்கோ கடந்திட்ட காற்று
நீயிட்ட முத்தங்களின்
ஈரம் இன்னும்
காயாமல் உள்ளதாய்
ஓயாமல் என்னிடம்
சொல்லிச்செல்கிறதடி கண்ணே!
- எப்போதோ சந்தித்த
இடங்களும்..
நாம் எப்போதும் சந்திக்கும்
இடங்களும்..
உன்னவள் நலமா?
என என்னிடம்
உரக்க கேட்டுக்கொண்டே
உள்ளதடி பெண்ணே!
- நாம் மிதித்து வைத்த
மண்ணின் மணத்தில்
நம் காதல் வாசம்
இன்னும் இருக்கிறது.
உன் காதலி எங்கே?
நான் தனித்திருக்கும் போது
தவறாமல்
காலம் கேட்க்கிறதடி முத்தே!
- உன் விரல் பட்ட
என் தேகம்
என் விரல் பட்டால் கூட
தன்னை விடுவித்துக் கொண்டு
என்னைக் கேட்க்கிறது..
முதல் ஸ்பரிசம்
தந்தாளே அவளை வரச்சொல்
தொட்டு விட்டுப் போகட்டும்
என்னை என்று..அமுதே!
- இவைக் கெல்லாம் நான்
என் சொல்வேன்?
என்னவள் எங்கோ
இன்னொருவன் மனைவியாகி விட்டாள்
என்றா?
- என் முதல் காதலே!!
நாளை
நீ வரும் போதும்
நிச்சயம் கேட்கும்.. இவையெல்லாம்..
உன்னவனை மறந்திட்டாயா என்று?
பதில் சொல்லக் காத்திரு..
பாவிப் பயல..என்னாலும்
இன்னும் மறக்க இயலவில்லையென்று!
ஒவ்வொரு நாளும் காதலர் தினமே!!
- கோலம் போடத் தெரியாதாமே
உனக்கு..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
காலிலே கோலம் போட
கற்று தந்ததோ காதல்.!
- உன் பட்டப்பெயர்
ஆல் இந்தியா ரேடியோவாமே!!
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
உன்னை
ஊமையாக்கியதோ உன் நாணம்.!
- மருதாணி போட்டால் கூட
சிவக்காத கைகளாமே உனக்கு.
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
வெட்கத்தில்
சிவந்ததோ உன் கன்னம்.!
- வெளியுலகம் அறியாதவளாமே
நீ..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
எப்படி அறிந்தாய்
என் உள் இதயம்.!
- இன்று ஒரு நாள்
காதலர் தினமாமே!!
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
உறுதிப் படுத்திக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!