Posts tagged ‘உலகம்’

கொடுத்து வைத்தவன்!

ஒய்யாரமாய் உன்னருகில்

உட்காரும்

ஒவ்வொரும் நிமிடங்களிலும்

உணர்கிறேன்

உலகத்தில் என்னை விட

கொடுத்து வைத்தவன்

எவனுமில்லை!

என்னை நீ  காதலிப்பதால்

காதலுக்கு மட்டும்

கொடுத்து வைத்திருக்கிறது!

ஒக்ரோபர் 14, 2011 at 11:46 முப பின்னூட்டமொன்றை இடுக

நல்லக்காதல் !

 • இளைப்பாற கொஞ்சம்

இடமும்

களிப்பார கொஞ்சம்

கருணையும்

உன் மடியிலும்

அடியிலுமாய்

என்னை கிடத்தி இருக்கின்றன!

 • காமத்தையும்,காதலையும்

தாண்டி

கண்டறிகிறேன்

உன்னிடத்தில்

ஏதோ ஓர் காரணி

என்னை கட்டுண்டு வைத்திருக்க!

 • செல்லத் தீண்டலிலும்

உன் செவிமடல் கடிப்பினிலும்

என்னை சிறையிட்டு வைப்பதிலும்

காதலிக்கும் ,மனைவிக்குமான

காலக்கனவை

நீயிட்டு நிரப்புகிறது

உன் நினைவும்,புணர்வும்!

 • பாரிய பாசமும்

தேறிய நேசமுமாய்

விசாலமடைகிறது

ஊருக்கு தெரியா

நம் உறவின் நீட்சி!

செப்ரெம்பர் 30, 2011 at 10:32 முப 2 பின்னூட்டங்கள்

எம்.எப்.ஹூசேனும்..இறவாப் புகழும்..!

 • வென்தாடியில் கிழம்

தட்டியவன்

எண்ணத்தில்

பதினாறை தொட்டவன்!

 • தளர்நடையில்

தடி பிடிக்கும் வயது

தளராத மனத்தோடு

தூரிகை பிடித்தவன்!

 • மாதுரி தீட்சித் முதல்

அனுஷ்கா சர்மா வரை

அனுபவித்து ரசிக்க

இவனிடத்தில்

இருக்கிறது இன்னும்

இளமைத்துள்ளல்!

 • இந்து கடவுளை  வரைந்தான்

பாரத மாதாவை வரைந்தான்

பகட்டு உடையின்றி

ஆடை களைந்தான்!

நிர்வாணம் இவன்

ஓவியத்தில் நிரூபணம்!

 • இவன் வரையும்

குதிரைகளில் தெரியும்

இவன் கோடுகளின்

தாண்டவம்!

கோடிகளில் கொட்டுகிறது

இவன்

கோடுகளுக்கு பணம்!

 • நாட்டின் புகழுயர்த்தி

நாயகனாய் நின்றவனை

நாட்டைவிட்டு விரட்டினர்

கேடுகெட்ட சிலகுழுக்கள்!

இல்லாத கடவுளுக்கு

ஏனடா உடையணியவில்லை என்று!

 • ஒருவேளை கலைமகள்

இருந்திருந்தால்

சினங்கொண்டு சிவந்திருப்பாள்

எனை கலைநயத்தோடு

வரைந்தவனை

உங்கள் களைக் கண்ணால்

பார்க்கிறீர்களே என்று!

 • இங்கு இருக்கும்வரை

மதிக்காது

இறந்தபின்

எங்களவர் என்று சொல்லி

எப்போதும் போலவே

இப்போதும்

மார்தட்டிக் கொள்ளப்போகிறது

இந்தியா.

நாமும் பெருமை கொள்வோம்

இனி..

எம்.எப்.ஹூசேன்

எங்கள் நாட்டவர்தான்!

ஜூன் 10, 2011 at 10:30 முப 20 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம்…

கணவனை சுமந்து

கரு சுமந்தாய்!

கணவனை விடவும்

கருமேல் காதல் சுமந்தாய்!

வாந்தியெடுத்து,வலிதாங்கி

கரு வளர்த்தாய்!

கருவை உருவாக்கி

பிரசவித்தாய்!

பாசம்காட்டி,பாலூட்டி

வளர்த்தெடுத்தாய்!

மழலைக் குறும்பை மனமகிழ்ந்து

பார்த்து ரசித்தாய்!

அப்பா அடிக்கின்ற தருணம்

அதைத்தடுத்து காவல் நின்றாய்!

உனக்கென கனவின்றி

பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!

பிள்ளை மனம் பூரிக்க

திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!

இன்று பேரக்குழந்தை உன் மடியில்

தாயே..

உலகம் என்றுமே உன் காலடியில்!

மே 8, 2011 at 9:51 முப 2 பின்னூட்டங்கள்

நீயே என் உலகம்!

 • நீயும்,நானும்

மட்டுமான

ஓர் உலகம்

வேண்டும்!

 • அதில் நீயே

என் உலகமென

நான்

வாழ்ந்திட வேண்டும்!

மார்ச் 28, 2011 at 8:24 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,117 hits

%d bloggers like this: