Posts tagged ‘உவமை’
திருடு…!
சிறிது சிறிதாய்
உழைப்பைக் கொடுத்து
சேமித்து எடுத்த
ஈக்களை விடவும்
திருடி பறித்தவன்
தினமும் ருசிக்கிறான்
அதிக தேனை!
மோனோலிசா ஓவியத்திற்கு முன்னால் செல்லாதே!
மோனோலிசா ஓவியத்திற்கு
முன்னால் செல்லாதேடி நீ !
இதுவரை
புன்னைகைத்துக் கொண்டிருந்த ஓவியம்
உன் அழகை கண்டு பொறாமை கொண்டு
முகம் சுருக்கி முறைக்கிறது பார்!
உன் காதலுக்கு உவமை சொல்ல!
இந்த உலகை விடவும்
பெரிது
நான் கொண்ட காதலும்
உன்மேல் கொண்ட
பாசமும்
என்று ஒவ்வொருமுறையும்
சொல்லி வைக்கிறாய்!
இப்போதெல்லாம் உலகம்
சுருங்கி
ஒரு கைக்குள் வந்துவிட்டது
கைப்பேசி வடிவில்!
காதலுக்கு உவமை
சொல்ல இந்த
உலகத்தை
நினைக்கதேடி இனி!
உன் பாசத்திற்கும்
காதலுக்கும்
உவமை சொல்ல
இந்த உலகத்திலும்
உலகைத் தாண்டியும்
உருவாகவில்லை
இதுவரை ஒன்றும்!
உன் இதழ்களை விரித்து வைக்காதே!
உன் இதழ்களை விரித்து
வைக்காதேடி
பூக்கள் என்றெண்ணி
ஈக்கள்
ஏமாறுகின்றன பார்!
முகநூளில் முகம் தெரியாதவளோடு!
அப்படி ஓர் எதிர்முனை தாக்குதலை நான் எதிர் பார்த்திருக்கவில்லை அவளிடத்தில்.
காலையில் என் அலைபேசியை அடைந்த ஆரம்ப குறுஞ்செய்தி அழகாய் என்னை வாழ்த்துவதாயும்,என் இன்முக புன் சிரிப்பை எதிர் நோக்கி அனுப்பியதாயும் தான் எனக்குப் பட்டது.வரிசையாய் வந்திருந்த ஏழு செய்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடர எனக்கு பின்மண்டையில் அடிப்பது போல் பேரிடியாய் வார்த்தை சீற்றம் குறுஞ்செய்தி வடிவில்.புன் சிரிப்பு மாறி புண்ணானது நெஞ்சம்.வார்த்தையில் சுட்டெரிக் கிறாள்.வலிமிகுந்த நெஞ்சில் எழுத்தீட்டியால் குத்தி எம்மை பிளக்கிறாள்.என்னை தாக்கிய வார்த்தைகள் எமக்கு வலிக்காது என அறிந்தவள் தம்மையே தாக்கி குறுஞ்செய்தியில் குமுறுகிறாள்.வேகம் கொண்ட வெறியில் எம் அன்பை அறிமுகம் செய்த,கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் நேசம் சேமித்து, நூறு சதவிகிதம், எங்கள் காதலை அடைகாத்து வைத்த அந்த வலைப்பகுதியில்,அவள் பக்கத்தை அகற்றுகிறாள்.அப்படியோர் அழுகையை அவளிடத்தில் அதற்கு முன் யாம் அறிந்ததில்லை.
பாசத்தின் வெளிப்பாடு கண்ணீராய் கசிகிறது.நெஞ்சம் வலிக்க நான் கூனிக் குறுகிப் போகிறேன் குற்ற உணர்வில்.அவள் அனுப்பிய வார்த்தைகளில்,அதிலுள்ள காதலின் ஆழத்தில்,அவள் அன்பின் ஆர்ப்பரிப்பில்!
மன்னிப்பாயா பாடலை திரும்ப திரும்ப கேட்டுப் பார்க்கிறேன்.
இன்னோர் இடத்திலிருந்தும் என்னையே நெஞ்சில் சுமந்து கிடக்கிறாளே..என்னை ஒவ்வொரு படியிலும் தூக்கி விட முனைகிறாளே!என் வளர்ச்சிக்காய் ஏதேதோ செய்கிறாளே!அப்படி பட்டவளை மறந்துவிட்டு..
ஆமாம் என்ன செய்து விட்டேன் நான்.
அவளுக்கு தெரியாமல் இன்னோர் புறாவுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தேன் சிக்குகிறதா என்று!முகநூளில் முகம் தெரியாதவளோடு ,மொக்கைப் போட்டுக் கொண்டு..நீங்களே சொல்லுங்கள்….
அவள் என்னை என்ன செய்திருக்க வேண்டும்?