Posts tagged ‘எழுத்து’
பின்னாளில் ஆகிப்போனது பிறந்தநாளாய்!
இப்படி ஒரு நாளில் தான்
உன்னோடு
பேச ஆரம்பிக்கின்றேன்.
பேசும் போது
நானறியவில்லை
எல்லோரிடமும்
போலவே
உன்னிடமும் இயல்பாகவே
பேசுகிறேன்.
நட்பாகவே பேசின
நம் மொழிகளும்
பார்வைகளும்..
ஆனால் அந்நாளே
பின்னாளில் ஆகிப்போனது
பிறந்தநாளாய்!
ஆம்…
அதுதான் நம் காதல் பிறந்த
நாள்!
அரசியல்வாதி அங்கிகாரம்!
சலவை செய்யப்பட்ட உடை
கசங்கி அழுக்கான உள்ளங்கள்
சமுதாயத்தில்
அரசியல்வாதி அங்கிகாரம்!
உன் காதலுக்கு உவமை சொல்ல!
இந்த உலகை விடவும்
பெரிது
நான் கொண்ட காதலும்
உன்மேல் கொண்ட
பாசமும்
என்று ஒவ்வொருமுறையும்
சொல்லி வைக்கிறாய்!
இப்போதெல்லாம் உலகம்
சுருங்கி
ஒரு கைக்குள் வந்துவிட்டது
கைப்பேசி வடிவில்!
காதலுக்கு உவமை
சொல்ல இந்த
உலகத்தை
நினைக்கதேடி இனி!
உன் பாசத்திற்கும்
காதலுக்கும்
உவமை சொல்ல
இந்த உலகத்திலும்
உலகைத் தாண்டியும்
உருவாகவில்லை
இதுவரை ஒன்றும்!
அலைபேசி மனிதாபிமானம்!
- உயிர் போராட்டத்தில்
வாகன நெரிசலில்
அலைபேசி உரையாடலினூடே
அலறுகிறது
ஆம்புலன்சின் அலாரம்.
- ச்சே… இந்த டார்ச்சர்
தாங்கல..ஒழுங்கா
பேசக்கூட முடியல..
பேசிமுடிக்கிறது
அலைபேசி மனிதாபிமானம்.