Posts tagged ‘ஓவியன்’
கழுத்தை நெரிக்க காத்திருக்கும் கை!
கழுத்தை நெரிக்க காத்திருக்கிறது காங்கிரஸ் கைகள்..
அப்பாவிகளை காப்பாற்ற வேண்டும் நமது கரங்கள்..இறுதி வரை போராடுவோம்…இல்லாதாக்குவோம் மரண தண்டனையை!
எம்.எப்.ஹூசேனும்..இறவாப் புகழும்..!
- வென்தாடியில் கிழம்
தட்டியவன்
எண்ணத்தில்
பதினாறை தொட்டவன்!
- தளர்நடையில்
தடி பிடிக்கும் வயது
தளராத மனத்தோடு
தூரிகை பிடித்தவன்!
- மாதுரி தீட்சித் முதல்
அனுஷ்கா சர்மா வரை
அனுபவித்து ரசிக்க
இவனிடத்தில்
இருக்கிறது இன்னும்
இளமைத்துள்ளல்!
- இந்து கடவுளை வரைந்தான்
பாரத மாதாவை வரைந்தான்
பகட்டு உடையின்றி
ஆடை களைந்தான்!
நிர்வாணம் இவன்
ஓவியத்தில் நிரூபணம்!
- இவன் வரையும்
குதிரைகளில் தெரியும்
இவன் கோடுகளின்
தாண்டவம்!
கோடிகளில் கொட்டுகிறது
இவன்
கோடுகளுக்கு பணம்!
- நாட்டின் புகழுயர்த்தி
நாயகனாய் நின்றவனை
நாட்டைவிட்டு விரட்டினர்
கேடுகெட்ட சிலகுழுக்கள்!
இல்லாத கடவுளுக்கு
ஏனடா உடையணியவில்லை என்று!
- ஒருவேளை கலைமகள்
இருந்திருந்தால்
சினங்கொண்டு சிவந்திருப்பாள்
எனை கலைநயத்தோடு
வரைந்தவனை
உங்கள் களைக் கண்ணால்
பார்க்கிறீர்களே என்று!
- இங்கு இருக்கும்வரை
மதிக்காது
இறந்தபின்
எங்களவர் என்று சொல்லி
எப்போதும் போலவே
இப்போதும்
மார்தட்டிக் கொள்ளப்போகிறது
இந்தியா.
நாமும் பெருமை கொள்வோம்
இனி..
எம்.எப்.ஹூசேன்
எங்கள் நாட்டவர்தான்!
பொதுவெளி கழிப்பறைகளில்!
ஓவியனல்லாதவனும்
ஓவியனாகிப்
போகிறான்..
கவிஞனல்லாதவனும்
கவிஞனாகிப்
போகிறான்..
சில மனிதர்கள்
சிந்தனாவதியாகிப்
போகிறார்கள்..
பொதுவெளி கழிப்பறைகளில்!
ஒளிச்சிதறல் ஓவியம்(2003 )
டிஜிட்டல் ஓவியம் கற்றலின் ,ஆரம்ப முயற்சியாக 2003 ஆம் ஆண்டு நான் வரைந்தது.
நீ கன்னியாகவே இருக்கிறாய்!
என் கற்பனை
காய்ந்த நேரத்தில்
மூளை வற்றிய
தருணத்தில்
சிந்தனை செத்த
சித்தங்களில் எல்லாம்
உன்னை
நினைக்கிறேன்.
ஊற்றெடுக்கிறது
ஓராயிரம்
சிந்தனைகள் ..
நீ கன்னியாகவே
இருக்கிறாய்!
எம்மை மட்டும்
கலைஞன் ஆக்கிவிட்டு!