Posts tagged ‘ஓவியம்’
வெயிலில் பெய்த மழை!
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்!
சிறுவயது நினைவை
சீண்டி சொல்கிறது
வெயிலோடு பெய்த
மழை!
விரும்பி தொலைக்கிறேன்!
உன்னை நான்
விரும்பி தொலைக்கிறேன்!
ஆதலாலே
உன்னிடத்தில் என்னை
விரும்பித் தொலைக்கிறேன்!
என்ன தவம் செய்தாயோ!
ஏ மழையே !
உனக்கு மட்டுமே
பொருந்திப்போகிறது
வற்றாத இளமையும்
மறுபிறவி மகிமையும்!
மழையென பிறந்து
ஆவியென வளர்ந்து
மேகமென மீண்டும்
கருவுகிறாய்
என்னும் பதினாறை
உன்னுள் வைத்துக்கொண்டு..
மீண்டும் மழையாகி
நிறைகிறாய் இம்மண்ணடியில்!
ஏ மழையே !
என்ன தவம் செய்தாயோ
இவ்வாரம் நீ பெறவே!
நல்லக்காதல் !
- இளைப்பாற கொஞ்சம்
இடமும்
களிப்பார கொஞ்சம்
கருணையும்
உன் மடியிலும்
அடியிலுமாய்
என்னை கிடத்தி இருக்கின்றன!
- காமத்தையும்,காதலையும்
தாண்டி
கண்டறிகிறேன்
உன்னிடத்தில்
ஏதோ ஓர் காரணி
என்னை கட்டுண்டு வைத்திருக்க!
- செல்லத் தீண்டலிலும்
உன் செவிமடல் கடிப்பினிலும்
என்னை சிறையிட்டு வைப்பதிலும்
காதலிக்கும் ,மனைவிக்குமான
காலக்கனவை
நீயிட்டு நிரப்புகிறது
உன் நினைவும்,புணர்வும்!
- பாரிய பாசமும்
தேறிய நேசமுமாய்
விசாலமடைகிறது
ஊருக்கு தெரியா
நம் உறவின் நீட்சி!