Posts tagged ‘கதை’
வெயிலில் பெய்த மழை!
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்!
சிறுவயது நினைவை
சீண்டி சொல்கிறது
வெயிலோடு பெய்த
மழை!
விரும்பி தொலைக்கிறேன்!
உன்னை நான்
விரும்பி தொலைக்கிறேன்!
ஆதலாலே
உன்னிடத்தில் என்னை
விரும்பித் தொலைக்கிறேன்!
தாய்மையை விட மேன்மை ஆண்மை!
வயிற்றில் கரு சுமந்தவளையோ
கையில் குழந்தை சுமந்தவளையோ
அடிக்கடி காண நேர்கிறது
எனது பேருந்து பயணங்களில்!
சுமையை சுமந்தபடி
கால் இடறி ஏறும் தாய்கள்
தவறி கூட நிற்பதில்லை
தாய்மார்கள் இருக்கை அருகில்!
அப்படியே நின்ற போதும்
மனம் இளகி எழுவதில்லை
மகராசிகள் எவரும்!
ஆணில் ஒருவன்தான்
அப்பொழுதும் எழுகின்றான்
தாயவளுக்கு இருக்கை தர!
தாய்களை விடவும்,தந்தைகளிடமே
நிரம்பி இருக்கிறது
அதிக பட்ச தாய்மை உணர்வு!
ஏழைகள் நாட்டில்!
நல்ல உடை கிழிக்கப்பட்டு
நவநாகரிகம்
ஆகிப்போகிறது
பணக்காரன் வீட்டில்!
கிழிந்த உடையை
தைத்துப் போட
காசில்லா ஏழைகள் நாட்டில்!