Posts tagged ‘கல்யாணம்’

எடைக்கு எடை தங்கம்!

உன் தகப்பன்

உன் எடைக்கு எடை

தங்கம் தருகிறேன்

என்றபோதே

நான்

யோசித்திருக்க வேண்டும்.

உன்னை மட்டும்

அனுப்பி வைத்து விட்டார்

பார்!

ஓகஸ்ட் 24, 2011 at 11:47 முப 5 பின்னூட்டங்கள்

காதலில் கசிந்துருகுகிறது!

இன்று

நீயவளின்

கரம்பற்றி விட்டதினால்

உன்னவளின்

கால்பற்றி

உயிர் வாழ்கிறேன் நானே!

இத்தனைக்காலம்

என்னை நீயும்

ஏங்கவைத்து விட்டாயேடா!

காதலில்

கசிந்துருகுகிறது

உன்காலில்

போட்ட மெட்டி!

ஜூன் 1, 2011 at 11:02 முப 6 பின்னூட்டங்கள்

மன்றல் விழா வாழ்த்துகள்!

வண்ணக்கனவுகளை எண்ணங்களாய் சுமந்தபடி

என்னைப்போலவே அவனும்..

ஓவியக்கல்லூரியில் ஒன்றாய்,ஒரே ஆண்டில் அடியெடுத்து வைத்ததோடு எனது சக வகுப்புத் தோழனாகவும்…

கல்லூரி எங்களின் நட்புக்கு களமான போதும்..எங்கள் நட்பு வீரியம் கண்டது விடுதியில்தான்.

ஒரே தட்டில் சாப்பிட்டு,ஒன்றாய் உறங்கி,சேர்ந்தே பட்டினி கிடந்து,சேர்ந்தே வேலை தேடி,சேர்ந்தே அறையெடுத்து தங்கி என சேர்ந்து சுற்றிய நாட்கள் ஏராளம் ..எல்லாம் நட்பின் ஆழம் சுமந்தவை..

எம் அன்பை சுமந்த அந்த ஆருயிர் தோழனுக்கு,தற்போது கலை இயக்குனனாய் திரைத்துறையில் களம் கண்டவனுக்கு, இன்று திருமணம்

மூர்த்தி,லட்சுமி கரம்கோர்த்து, இன்முகம் மாறாது ,இல்லறவாழ்வில் நல்லறம் கண்டு ,

இல்வாழ்வை தொடர்ந்திட வாழ்த்துகள்…

பிப்ரவரி 16, 2011 at 7:00 முப 4 பின்னூட்டங்கள்

முதிர்கன்னி ஆனவளுக்கு!

  • வாசல் தேடி வந்து

பொண்ணு கறுப்பென்றான்

ஒருவன்

கலையில்லை யென்றான்

மற்றொருவன்

ஒல்லி என்றான்

இன்னொருவன்.

இவளுக்கு பிடித்திருக்கிறது

வந்தவர்கள் ஆயிரம் பேர்!

  • வாசல்தேடி வந்தவனை

வசதியில்லை என்கிறாள்

உயரமாய் இருந்தால்

பரவாயில்லை என்கிறாள்

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டுகிறேன் என்கிறாள்.

இவளின் புறக்கணிப்பில்

சென்றவர்கள் ஆயிரம் பேர்!

  • காலம் செல்கிறது

கட்டளை தளர்கிறது.

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டாமென்கிறாள்.

உயரம் குறைந்தாலும்

பரவாயில்லை என்கிறாள்.

வசதி இல்லாவிடினும்

வாழ்வித்தால் போதுமென்கிறாள்.

வரன்

தேடுகிறார்கள்.

வருகிறது

வரன்

இரண்டாம் தாரமாய்

முதிர்கன்னி ஆனவளுக்கு!

ஜனவரி 11, 2011 at 8:38 முப 18 பின்னூட்டங்கள்

காதலாலே தமிழ் வாழ்கிறது!

  • ஆங்கில நுனிநாக்கும்

வடமொழி கலந்த

பெயருமாய்

எம்மில் அகம் புகுந்து

ஆக்ரமித் திருந்தாள்

எம் காதல் நாயகியாய்

-அந்நாளில்..

  • இன்று

இன்னொருவன்

மனைவியானவள்.

  • நாம் பெற்றெடுக்கும்

குழந்தைக்கு

தமிழில்தான் பெயர்

வைத்திட

வேண்டுமென்று

நான் கூறிட்ட

நேரங்களிலெல்லாம்

எமை குறுக்கிட்டு..

  • வடமொழி கலந்தே

நாகரிக

பெயர் வைப்பேன்

என்று என்னிடம்

காதல் காலத்தில்

கடிந்து கொண்டவள்.

  • இன்று

அவள் மகிழ்வோட

பெற்றிட்ட மழலைக்கு

பெயர்வைக்க

கணவனுக்கு தெரியாமல்

கோரிக்கை ஒன்றை

வைக்கின்றாள்!

  • காலம் செய்தக்

கோலத்திலே

உமை-எம்மால்

கைபிடிக்க தான்

இயலவில்லை.

எம் குழந்தைக்கு

வைப்பேன்-

நீ விரும்பிய தமிழ் பெயரை!

  • காதலாலும் தமிழ் வாழ்கிறது!

நவம்பர் 16, 2010 at 12:02 பிப 14 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: