Posts tagged ‘காதல் கடிதம்’
முடிவுறா முதல் காதல்
ஏதோ
எழுத நினைத்து
எப்போதும் அமர்கையில்
என் மனதில்
ஏதோதோ எழுதி
விட்டுப் போன
அவளின் நினைவு…
எழுதிடும் வார்த்தைகளில்
என்னையறியாமல்
வருகிறது
அவளின் வாசம்.
அவள் தேகம்
உரசிய என் ஆடையிலும்
அவளோடு அலைந்து
திரிந்த அங்காடியிலும்
இன்னும் மாறாதிருக்கிறது
அவளின் சுவாசம்.
அவள் நினைவிலிருந்து
மீண்டிட வேண்டும்-என்றெண்ணி
எண்ணி எண்ணி
அவள் நினைவுகளை
நீட்டித்துக் கொண்டது
எந்தன் நேசம்.
ஏதோ
வரைய நினைத்து
எப்போதும்
அமர்கையில்
என் நெஞ்சில்
ஏதோதோ வரைந்து விட்டுப் போன
விட்டுப் போன
அவளின் நினைவு…
வரைந்திடும் தாள்களில்
என்னையறியாமல்
வருகிறது
அவள் உருவம்.
இப்படித்தான்
எழுதவோ,வரையவோ
மறக்கவோ,நினைக்கவோ
என்ன எண்ணினாலும்
என்னிலிருந்து
மறக்காமலும் ,மாறாமலும்
இருக்கிறது
முதல் காதலும்-அவள் நினைவும்.
அவளுக்கின்று பிறந்தநாள்
அன்பின் இலக்கணம் சொல்லி
என்னில் அகம் புகுந்தவள்..
அகம் புகுந்து என்னில்
அகம்பாவம் உடைத்தவள்.
அவளுக்கின்று பிறந்தநாள்
அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.
ஊருக்கு அடங்காதவனை
தன் உறவுக்குள் அடைத்தவள்.
பிற்போக்கு உடைத்தென்னில்
முற்போக்கு விதைத்தவள்.
என் அன்பிற்க்கின்று பிறந்தநாள்
ஆராதித்து மகிழ்கின்றேன்.
கல்லான நெஞ்சிக்குள்ளும்
காதல் மொழி புதைத்தவள்.
களங்கமில்லா என் நெஞ்சை
களவு செய்து சென்றவள்.
காதலிக்கு பிறந்தநாள்
கருணைமொழி கூறுகின்றேன்.
இறுகிக்கிடந்த உளந்தனை
உருகிக் குலைய செய்தவள்.
லப் டப் ஆன ஒலியை
லவ் டப் ஆக்கி எனை வென்றவள்.
உயிர்க் கின்று பிறந்தநாள்
உளமாற போற்றுகின்றேன்.
உமக்கு மணமாயினும்
மறவாது என் நெஞ்சம்.
முதல் காதல் ஆயிற்றே
என் மனம் முழுக்க உன் காதல் வாசமே எஞ்சும்.
என்னவளுக்கு..என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..