Posts tagged ‘கிழவன்’
பெற்றால்தான் பிள்ளையா!
கைக்கொடுக்க பிள்ளையற்ற
தருணத்தில்
எம்மை கைத்தாங்கி
செல்கிறாயே!
எம்முடனே அருகிருந்து
எமை பார்த்துக் கொள்கிறாயே!
தளர்நடையில் வந்து
தடுமாறி அமர்ந்திட்ட
முதுவயது கிழவனின்
நம்பிக்கை கைத்தடி!
முதிர்கன்னி ஆனவளுக்கு!
- வாசல் தேடி வந்து
பொண்ணு கறுப்பென்றான்
ஒருவன்
கலையில்லை யென்றான்
மற்றொருவன்
ஒல்லி என்றான்
இன்னொருவன்.
இவளுக்கு பிடித்திருக்கிறது
வந்தவர்கள் ஆயிரம் பேர்!
- வாசல்தேடி வந்தவனை
வசதியில்லை என்கிறாள்
உயரமாய் இருந்தால்
பரவாயில்லை என்கிறாள்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டுகிறேன் என்கிறாள்.
இவளின் புறக்கணிப்பில்
சென்றவர்கள் ஆயிரம் பேர்!
- காலம் செல்கிறது
கட்டளை தளர்கிறது.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டாமென்கிறாள்.
உயரம் குறைந்தாலும்
பரவாயில்லை என்கிறாள்.
வசதி இல்லாவிடினும்
வாழ்வித்தால் போதுமென்கிறாள்.
வரன்
தேடுகிறார்கள்.
வருகிறது
வரன்
இரண்டாம் தாரமாய்
முதிர்கன்னி ஆனவளுக்கு!