Posts tagged ‘கோபம்’

சமூக வலைப்பின்னலில் சங்கமமாய்!

எங்கேயோ எப்போதோ

தொலைத்த முகங்கள்

காலச்சக்கரத்தில்

கண்ணிமைக்கும் நேரத்தில்

தொலைந்த முகங்கள்

அலைந்து திரிந்து

அட்ரஸ் தேடியும்

அகப்படாத முகங்கள்

பிரியா விடைகொடுத்து

பிரிய மனமின்றி

பிரிந்த முகங்கள்

பிரிவின் வலிதாங்காது

கண்ணீரில் கரைந்த முகங்கள்

கால ஓட்டத்தில் தம் காதல்

கதைகளை மறந்த முகங்கள்

உலகம் சுருங்கி

ஒற்றை முகமாய்

சமூக வலைப்பின்னலில்

இன்று சங்கமமாய்

எல்லோரும்

சிரித்த முகமாய்!

ஜூலை 4, 2011 at 10:32 முப 8 பின்னூட்டங்கள்

பக்குவப்பட்ட இந்தியனாய் நம்மையும் இணைத்துக் கொண்டோம்!

அழுக்கேறிக்

கொண்டே இருக்கிறது.

துருப்பிடித்த கறை

விரைவாய் பரவுகிறது.

அழுகிய பிணத்தின்

வாடை ஆக்ரமிக்கிறது.

ரத்தம் தோய்ந்த பூமி

சிவப்புக் கம்பளமாகிறது.

பாதைகள் பயன்படுத்தப்படாமல்

பசும் புற்களை மிதித்து நடக்கிறோம்.

கூரியக் கற்களின்

சிராய்ப்புகள் ரசிக்கப்படுகின்றன.

தலைகள் வெட்டப்பட்டு

ஆங்காங்கே வீசப்படுகின்றன.

குப்பையில் வாழவும்

சகிப்பை பெறுகிறோம்.

சாக்கடைகளின் நாற்றம்

நறுமணம் கமழ்கிறது.

ரத்தக் கொதிப்பு

நமக்கு வருவதே இல்லை.

விடியலை விடவும்

இருட்டு விரும்பப்படுகிறது.

பக்குவப்பட்ட இந்தியனாய்

நம்மையும்

இணைத்துக் கொண்டோம்

ஊழலில்!

ஏப்ரல் 9, 2011 at 8:26 முப 12 பின்னூட்டங்கள்

காலில் குத்திய முள்!

உன் காலில்

குத்திய முள்மீது

கடுங்கோபம்

கொள்கிறாய்!

அது-உன்மேல்

கொண்ட காதலால்

முத்தமிட்டதை

உணராதவளாய்!

மார்ச் 3, 2011 at 11:56 முப பின்னூட்டமொன்றை இடுக

சிவக்க வைக்கிறேன் உன்னை

  • கருப்பாய் இருப்பதாய் சொல்லி

என்னிடம்

கவலைக்கொள்கிறாய் நீ..

  • அதனால் தானடி

உனை-

அடிக்கடி வம்புக்கிழுத்து

கோபத்தில் சிவக்க வைக்கிறேன் நான்.

மே 16, 2010 at 12:30 பிப 2 பின்னூட்டங்கள்

பூப்பெய்தேன்..பூவானேன்.

எனை முத்தமிட தேடிவரும்
வண்டிற்க்காய்
நான் இதழ் விரித்து காத்திருக்கிறேன்.

வரவேற்று காதலனை
தேனமுது கொடுத்து
பூப்பெய்தேன்..அதனாலே பூவானேன்.

பூவான என்மேலே
பூவைக்கென்ன கோபம்.
தலைக்கொய்து ,கொலைசெய்தாள் என்னை.

ஓ..தன்னைவிட அழகி ஒருத்தி
இம்மண்ணிலே கூடாதென்றோ!!

திசெம்பர் 23, 2009 at 8:54 பிப பின்னூட்டமொன்றை இடுக




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: