Posts tagged ‘சமுதாயம்’
ச(சா)தி வலை!
சாதி எதிர்த்து பாடியவனும்
சாதி எதிர்த்து சாடியவனும் கூட
சாதி அடையாளமாக்கப்படுகிறான்
சதி நிறைந்த சமுதாயத்தில்!
அருகாமையில் நீயிருந்தால்!
அருகாமையில் நீயிருந்தால்
அகிலம் கூட
சிறிதாகிறது!
சோகம் எமை சூழ்ந்தபோதும்
உம் தோள்சாய
எல்லாமே சுகமாகிறது!
சாதிகள் இல்லை
சமுதாய களைகள் இல்லை
சமத்துவம் நம்மிடத்தில் சங்கமமாகிறது!
நம் மூச்சுக் காற்று
இன்னும் முடிவுறாமல் இருப்பது
அந்து மூன்றெழுத்து
மந்திரத்தில்தான்-நட்பு!
அன்பர்கள் அனைவர்க்கும்
என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
அழுக்கு உள்ளம் அடுத்தவனை சொல்கிறது!
நிறத்தை பார்த்திடுவார்
இவன் கறுத்த நிறத்தான்
அவனாய் இருப்பானோ என்றுரைப்பார்!
ஆடையை கண்டிடுவார்
இவன் ஏழை அழுக்கன்
நாகரிகமில்லாதவன் என்றுரைப்பார்!
சமுதாய துயர்கண்டு
ஆவேசப்படுகிறவனை
அறிவில்லாதவன் என்றுரைப்பார்!
சமூகத்தில் உயர்ந்தவனை
தகுதியில் சிறந்தவனை
பணத்திமிரில் ஆடுகிறான் பாரென்பார்!
சாதியை தேடியறிந்து
இவன் இழிகுலத்தான்
இப்படித்தானிருப்பான் என்றுரைப்பார்!
எல்லாத்தையும் சேர்த்து
ஒற்றைச்சொல்லில் உதிர்த்திடுவார்
அது அவன் சாதி புத்தி!
கறுத்த உள்ளத்தையும்
அழுக்கான மனதையும்
அறிவிலி சிந்தனையும்
உள்ளுக்குள்ளே அமர்த்திக்கொண்டு
ஊரை வசை பாடுகின்றார்
ஊருக்குள்ளே இவர்
பெரிய மனுசனாம்..உயர் சாதிக்காரனாம்!
அவன்.. இவன்..
- அன்றைக்கு ஆண்டை வீட்டின்
கொத்தடிமையாய்
அவன்!
- இன்றைக்கு கல்வியறிவில்
மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்
சமுதாயத்தில் அவன் மகன்
இவன்!
- அன்றைக்கு சேரிக்காரன்
என்று
ஒதுக்கப்படவனாய்
அவன்!
- இன்றைக்கு சேற்றில்
பிறந்த செந்தாமரையாய்
ஒளிமிக்க இவன்!
- அன்றைக்கு அவன் அப்பனை
அடேய் என்றழைத்தான்
உயர்குலத்தான் என்கிற
அவன்!
- இன்றைக்கு அவன் மகனை
வாய்விட்டு வராத வார்த்தைகளால்
சார் என்கிறான் அவனே
இவன்!
- பணம் இருக்கிறது
படிப்பறிவில் உயர்ந்து விட்டான்
சாதி அழிந்துவிட்டது என்கிறான்
அவன்!
- தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்!
- தாழ்த்தப்படவன் என்றறிந்தும்
படிக்கும் போது
“மச்சி “என்று
நட்பு பாராட்டியவன்
அவன்!
- தன் குலப்பெண்ணை
காதல் கொண்டான் என்பதற்காய்
கீழ்சாதிக்கார நாய்
என்கிறான் இப்போ
இவன்!
- பள்ளியில் படிக்கிறான்
அவனும் இவனும்
ஒன்றாய்..
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’