Posts tagged ‘சாராயம்’

மதுவை நிரப்பி!

மதுவை நிரப்பி

வைத்திருக்கிறாயோ

உன் விழிகளில்!

பார்த்தவுடன்

போதை ஏறுகிறதெனக்கு!

செப்ரெம்பர் 28, 2011 at 10:27 முப 4 பின்னூட்டங்கள்

சனிக்கிழமை சொல்லும் கதை!

ஒவ்வொரு சனிக்கிழமைக்கும்

ஒவ்வொரு

கதை இருக்கிறது

ஒவ்வொரு சனிக்கிழமையும்

ஒவ்வொரு

கதையில் விடிகிறது!

சிலருக்கு

சனிக்கிழமை விடுமுறை

இரண்டு நாள் சந்தோஷம்

இன்றிலிருந்தே ஆரம்பம்

சிலருக்கு

ஞாயிறு விடுமுறை

மறுநாள் சந்தோஷம்

இன்றிலிருந்தே ஆரம்பம்

எதிர்பாத்து வைத்திருந்த

சினிமாவை இன்று பார்க்க

கூடி குலாவி,குதூகலம் மிஞ்சிட

நண்பனை சந்திக்க

எப்போ சந்திப்போம் என்றொரு

ஏக்கத்தோடு காதலை எதிர்நோக்க

களிப்புகள் கூட,மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க

ஒய்யாரமாய் ஊருக்கு போக

கணவனோடு மனைவி சேர்ந்து

நாள் முழுதும் சேர்ந்து இருக்க

சகோதரத்தோடு விடுமுறையில்

சண்டை பிடிக்க

பாட்டியோடும்,தாத்தாவோடும்

பாசம் பகிர

மதுவிருக்க மயக்கம் தர

மாதுவிருக்கா கட்டிப்புணர

பப்புக்கும் மப்புக்கும் மனம் நகர

என்று

ஒவ்வொரு சனிக்கிழமையிலும்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு

கதை இருக்கிறது

ஒவ்வொரு சனிக்கிழமையும்

ஒவ்வொரு

கதையில் விடிகிறது!

செப்ரெம்பர் 3, 2011 at 12:04 பிப 3 பின்னூட்டங்கள்

சாராயம்,பீடி வைத்து சாமி கும்பிடுகிறாள்!

  • ஆடு வெட்டி,கோழி வெட்டி

பன்றியோடு

முப்பூசையிட்டு

சாராயம்,பீடி வைத்து

சாமி கும்பிடுகிறாள்

குலதெய்வம் கோவிலில்!

  • சாமி

என் புருசனோட

குடிபழக்கத்த

மறக்க செஞ்சிடுன்னு!!

மே 31, 2011 at 10:45 முப 6 பின்னூட்டங்கள்

தூங்கா நகரம்-நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை!

பிரமாண்டடமான அரண்மைனைப் போன்ற அந்த பழைய காலத்து பங்களாவில் கீழிருந்து மேல்நோக்கி கேமரா நகர்ந்து அதன் உச்சத்தை எட்டி ,உள்ளே புகுந்து பங்களாவின் இண்டு இடுக்குகளை உள்வாங்கி உள்நுழைந்து அறைகளின் அனைத்துப் பக்கங்களிலும் ஊடுருவி,வழிநெடுகே பயணித்து வீட்டை விட்டு வெளியே வாசல் வழி வருகையில் மழை பெய்யத் துவங்கி இருக்கிறது,மூவரின் கால்கள் தண்ணீரில் ஊடுருவ ,சாக்குபோர்த்திய உருவங்கள் கையில் டார்ச் லைட்டுடன் பயணிக்க,அந்த இரவின் வெளிச்சத்தில் நம்மை ஆரம்பமே மிரள வைக்கிறது.இப்படித்தான் தொடராய் பதிவு செய்திருக்கிறது காமெரா.. திகில் படமோ என்கிற மனநிலையை அந்த லைட்டிங் செய்கிறது.அப்புறம்தான் ஆரம்பிக்கிறது நாலு நண்பர்களின் கடந்தகால வாழ்க்கை ,வடிவேலுவின் வாய்ஸ் உடன்.

மதுரை மீனாசியம்மன் கோவில்,தூங்கா நகரத்தின் இரவு சாப்பாடு,அழகர் கோயில் திருவிழா என அமர்க்களமான ஆரம்பத்தில் திரை முழுக்க வியாபித்திருக்கும் மனித தலைகள் ,படத்தின் தலைப்பு இவையெல்லாம் ஒரு முழுமையான மதுரையை பார்க்கப் போகிற எண்ணத்தை நம்முள் விதைத்துப் போகின்றன.

ஒருத்தன் பயந்தான்கொள்ளி எலெக்ட்ரிசியன் ,இன்னொருவன் காதலில் அலையும் ஊமை,அடுத்தவன் வீடியோ எடுக்கிறவன்,மற்றவன் மின்சார இடுகாடு பராமரிப்பாளன், இப்படியாய் இருப்பவர்களுக்குள் வைகை பாரில் குடிக்குமிடத்திலிருந்து குடிகொள்கிறது நட்பு.

தெருவோர த்ரிசாவாக ஏரியாவிலும் ,டிவி யில் ராதா என்கிற அறிவிப்பாளராக அஞ்சலி.களவாணி(அஞ்சலி) ராதா ஆனதும்,தவிடன் (விமல்)கண்ணன் ஆனதிலிருந்தும் அவர்களுக்கான காதல் ஆரம்பம்… பிளாஷ் பேக்.

வில்லனின் மகனாக வருபவன் ,துணிக்கடை வைத்திருக்கும் நண்பன் உதவியுடன் ,பெண்களின் ஆடை மாற்றும் படத்தை தன் மொபைல் கேமராவில் பதிவு செய்து..அதை அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு MMS அனுப்பி அவர்களை அனுபவிக்கப் பார்க்கிறான்.இந்நிலையில் பாதிக்கப் பட்ட பெண் விபத்தாகிறாள்.

அதேபோல் இன்னொரு பொண்ணுக்கு பொறி வைக்கையில் ,எலிக்கு வைத்தப் பொறியில் புலி மாட்டினால் என்னாகும்..அப்படித்தான் ஆகிப் போகிறது நண்பர்களின் கதை.பொறி தவறி நாயகனிடம் போய்,வில்லன் மகனுடன் சண்டையிட்டு ,சிக்கலில் நண்பர்களும்..இப்போ நண்பர்களுக்குள்ளேயே மரண பயத்தை உண்டு செய்து நாயகனை முடிக்க வில்லன் எப்படி விவகாரம் பண்ணுகிறான்..விவகாரத்தில் யார் ,யார் எப்படி வில்லத்தனம் செய்கிறார்கள்..சிக்கல் எங்கே சிக்குண்டு போகிறது என்பதுதான் கதை.

கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்ப்பட்டாலும் விறுவிறுப்பாகத்தான் போகிறது.நடிகர்களும்,ஏனைய அறிமுகங்களும்,இயக்குனரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.கேமராகோணம் மிக அருமை.இயல்பாக போன கதை கிளைமாக்சில் சினிமாப் பூச்சானது நம்மை கொஞ்சம் சலிப்பூட்டச் செய்கிறது .

நாம் எதிர்ப் பார்த்த முழுமையான மதுரை மேப்பில் மட்டுமே இருந்தது.படத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமே.மற்றபடி படம் பார்க்கலாம் ரகம்!

தூங்கா நகரம் நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை.!

பிப்ரவரி 6, 2011 at 1:45 பிப பின்னூட்டமொன்றை இடுக
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: