Posts tagged ‘சுவாசம்’
ஓவியர்களின் ஆவிகள் உலவுகின்றன!
மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்
மதுவின் மயக்கத்தில்
வான்கா வந்தானோ!
வண்ணம் தோய்த்து சென்றானோ!
சற்றுநேரம் காத்திருக்க
தளர்நடையில்,தாடியுடன்
டாவின்சி வந்தான்
மோனோலிசா முகம் வரைந்து சென்றான்!
நடுவானில் மதியநேரம்
குறு குறுவென வரைந்தான்
குச்சு மீசைக்காரன்
குறும்புக்கார டாலி!
மாலைபொழுது மதிமயக்க
பிக்காசோ வந்திடக் கண்டேன்
வண்ணத்திட்டுகள் ஆங்காங்கே
வரைந்திடவும் கண்டேன்!
சிற்பியின் செதுக்கலில்
சிக்குண்ட கற்கள்
ஆங்காங்கே-சிதறிட
ஆண்ஜெலோ தெரிந்தான்.
பின்னிரவு நேரம்
இருட்டைக் கிழிக்கும் ஒளியாய்
தூரிகைத் துளிகள்
தெளிக்க ரெம்ப்ரண்ட் வரைந்தான்..
மாறி மாறி
வண்ணமடிக்க
வருகின்றனரோ ஓவியரும்!
ஒரே கான்வாஸில்
உலகப்புகழ் ஓவியங்கள்!
ஏ வானமே!
ஓவியனின் ஆவிகள்
உன்னுடன்தான் அலைகின்றனவோ!!
பறிபோகும் சுதந்திரம்
இப்போதுதான் பிறந்த
அந்த பிஞ்சு முகத்தில்
சுதந்திர சுவாசம்.
முடிகூட அடங்காமல்
முறைத்துக் கொண்டிருந்தது.
அழுதலில் கூட
ஆக்ரோசம் தெரிந்தது.
கண்கள் எதையோ
வெறித்து தேடுகிறது.
காதுகள் புறவொலிகளை
உன்னிப்பாய் உணருகிறது.
கை,கால்களை ஆட்டியபடி
கவலையற்றுக் இருக்கிறது குழந்தை.
அழுதலை அடக்கி
அடங்காமுடி சீவி
துள்ளிகிட்டே இருக்கான்
பாலூட்டி தூங்க வை
என முதல் சுதந்திரமே
சிறைப்படுத்தப் படுகிறது
தாயின் அன்பில்..