Posts tagged ‘செடி’

தண்ணீர்…கண்ணீர்!

பணக்கார பங்களாவில்

அழகுக்காய்

கொட்டுகிறது தண்ணீர்!

அருகாமை குடிசைகளில்

தண்ணீர் வேண்டி

அரசுக்கு மனுபோட்டு

இயலாமையில் மக்கள் கண்ணீர்!

 

செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக

புகுந்த வீடு !

  • பிறந்த வீட்டைக்

காட்டிலும்

புகுந்த வீட்டிற்கு

போக

புன்முறுவல்

பூக்கிறது பூ!

  • செடியில் கொய்து

உன் கூந்தலில் இட்ட

மலர்!

மே 21, 2011 at 10:37 முப 10 பின்னூட்டங்கள்

முடி வெட்டிய மரம்!

முடி வெ(கொ)ட்டிய

மரங்களைக்

கண்டேன்.

இலையுதிர் காலம் !

 

மார்ச் 27, 2011 at 11:52 முப 4 பின்னூட்டங்கள்

ஒண்ட வந்த பிடாரி!

பற்றி வாழ

விட்டதில்

பட்டுப் போனது

மரம்

படர்ந்த கொடியால்!

மார்ச் 19, 2011 at 2:28 பிப 6 பின்னூட்டங்கள்

போரும்,அமைதியும்!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

இடியுடன் கூடிய

மழை யொன்றை

எதிர்பார்த்து

மலர்ந்திருக்கிறதோ

மலர்!

போரை அறிந்தும்

புன்முறுவல் பூத்து!

 

மார்ச் 5, 2011 at 10:52 முப 1 மறுமொழி

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: