Posts tagged ‘தமிழன்’
காந்தி ஜெயந்தி கொண்டாட்டமாம் !
விவரம் தெரியா வயதில்
வெட்ட வெயிலில்
மொட்டையடிக்கப்பட்டு
ஊர்வலமாய் குழந்தைகள்
காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!
கறுப்பினத்தின் விடுதலை சரித்திரமே!
இருபத்தியேழு ஆண்டுகள்
இணையற்ற துன்பத்தை
சிறையில் சுமந்தவனே!
கறுப்பினத்தின்
வெள்ளை சரித்திரமே!
தென் ஆப்பிரிக்காவின்
விடுதலை வேள்வியே!
உமக்கு பிறந்த நாளாம்
இன்று!
இந்த உலகம் உன்
அர்ப்பணிப்பை
மறக்காது என்றும்!!
வாழ்க நின் புகழ்!!
அலைபேசி மனிதாபிமானம்!
- உயிர் போராட்டத்தில்
வாகன நெரிசலில்
அலைபேசி உரையாடலினூடே
அலறுகிறது
ஆம்புலன்சின் அலாரம்.
- ச்சே… இந்த டார்ச்சர்
தாங்கல..ஒழுங்கா
பேசக்கூட முடியல..
பேசிமுடிக்கிறது
அலைபேசி மனிதாபிமானம்.
ஏந்துவோம் மெழுகுவர்த்தி! எழுச்சியோடு வாரீர்!
ஏந்துங்கள் கையில் மெழுகுவர்த்தி!!
ஏற்றுங்கள் நெஞ்சில் ஈழம் காண்பதற்கான எழுச்சி!!