Posts tagged ‘தலைவன்’

ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!

ஆள்பவனும் அரசியலால்

வாழ்பவனும்

காலாட்டிக்கொண்டு வீட்டில்!

அப்பாவி மனிதனும்

அபலைத் தொண்டனும்

அடித்துக்கொண்டு ரோட்டில்!

ஒக்ரோபர் 20, 2011 at 10:43 முப 1 மறுமொழி

பாலாபிசேகம்!

பசியின் பிடியில்

பாலின்றி அழும்

பச்சிளங்குழந்தை.

பாலாபிசேகத்தில்

நடிகன் கட் அவுட்!

ஜூலை 14, 2011 at 10:29 முப 6 பின்னூட்டங்கள்

அலைபேசி மனிதாபிமானம்!

  • உயிர் போராட்டத்தில்

வாகன நெரிசலில்

அலைபேசி உரையாடலினூடே

அலறுகிறது

ஆம்புலன்சின் அலாரம்.

  • ச்சே… இந்த டார்ச்சர்

தாங்கல..ஒழுங்கா

பேசக்கூட முடியல..

பேசிமுடிக்கிறது

அலைபேசி மனிதாபிமானம்.

ஜூலை 13, 2011 at 10:59 முப 3 பின்னூட்டங்கள்

களையும் அழகுதான் !

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

நேர்க்கோடு கோணலாகும்

போதுதான்

அதில் ஒரு ஓவியம்

கருவாகிறது!

கைகள் நடுங்கிட

படமெடுத்து

களையான புகைப்படம்

இங்கே

கலையானது காண்பீர்!

ஜூன் 14, 2011 at 11:44 முப 5 பின்னூட்டங்கள்

நீயற்று நீள்கிற இரவு!

உன்மேல் கொண்ட

மோகத்தினூடே

என் உடற்பசியின்

தாகத்தினூடே

தலையணையை

தலைவனாக்கி

எதிர்ப்புகள் அற்ற

இணக்கத்தில்

இன்னும் நீள்கிறது

எனக்கான

நீயற்ற இரவு!

ஏப்ரல் 20, 2011 at 10:35 முப 6 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: