Posts tagged ‘தலைவன்’

தலை(வி)யணை காவியம்!

உன் காதலின்

ஆழம்

எவ்வளவு என்று

உன்னிடம்

வினவுகிறேன்!

என்னிடம்

கேட்பதை விட

என் தலையணையிடம்

கேட்டுப்பார்..

உன்னை எண்ணி

நான்

கட்டியணைத்த

தருணங்களையும்

கண்ணீர் சிந்திய

தருணங்களையும்

அது காவியமாய்

சொல்லும்

என்கிறாய் நீ!

என்னை

பொறாமையில்

ஆழ்த்திவிட்டு!

மார்ச் 31, 2011 at 10:59 முப 4 பின்னூட்டங்கள்

பசலை நோய்!

  • அன்று

வெளிநாட்டு மாப்பிள்ளை

என்றபோது

நிலவவளின் முகத்தில்

அப்படியோர் பௌர்ணமி!

  • இன்று

வேலைக்கு சென்ற

கணவனை எதிர்பார்த்து

தேய்ந்து தேய்ந்து

இருண்டுவிட்டாள்

அமாவாஸ்யையாய்!

  • சங்ககால மங்கையைப்போல்

இப்போ இவளிடத்தில்

பசலை நோய்!

பிப்ரவரி 11, 2011 at 10:57 முப 6 பின்னூட்டங்கள்

கலியுக சீதைகள்!

பட்டாய் பறக்கிறது

சிட்டு

பைக்கில்..

முகம் தெரியாதபடி

துப்பட்டாவை

போர்வையாய்

போர்த்திக்கொண்டு.

இறுக அணைத்தபடி

இளைஞனை!

–000–

அருகாமை

வாகனத்தில்

கணவனோ

தந்தையோ

தம்பியோ

தங்கையோ

அண்ணனோ

யாரறிவார்

அவள் முகமூடி

அவதாரத்தை!

–000–

அலைபேசியில்

பதியப்பட்டிருக்கிறது

அழகாய்..

பெண் பெயரில்

அவன் பெயர்.

அவள் அழைப்பினில் கூட

அவன் ஏனோ

அவளாகிப்போகிறான்.

–000–

அவள் போட்டிருக்கும்

டி சர்ட்டில்

வாசகம் சொல்கிறது

IM BITCH (நான் நடத்தை கெட்டவள்)

நவநாகரீக மங்கையவள்!

–000–

தாலிக் கட்டிக் கொண்டு

வேலித் தாண்டியவளின்

வார்த்தை

காஸ்மோ கல்ச்சர்

கவலை வேண்டாம்

இதெல்லாம் சகஜம்

காலம் மாறிடுத்து!

பிப்ரவரி 1, 2011 at 12:37 பிப 23 பின்னூட்டங்கள்

எழுத்தாட்டம்!

பொங்கல் என்ற உடனேயே தித்திக்கும் செங்கரும்பைக் காட்டிலும்,தீஞ்சுவை பொங்கலைக் காட்டிலும் என் நெஞ்சில் நீக்கமற நிறைந்து நிற்பது என் ஊரில் காட்டப்படும் எழுத்தாட்டம் தான் .ஏனோ அது என்னில் உண்டாக்கும் லயிப்பு அப்படி.சீறும் காளைகளற்ற ஏழை ஊரது.அதனாலோ என்னவோ என் ஊர் பக்கங்களில் ஜல்லிக்கட்டு சாத்தியப்படாமல் போயிருந்தது.ஜல்லிகட்டுகாக கொம்பு சீவி வளர்க்கப்படும் பணக்கார வீட்டு காளைகள் எங்கள் ஊரில் இல்லை.ஏருழும் எருதுகளே எங்களுக்கு கரிநாளன்று(மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள்) களிப்புக் காட்டும் காளையாகிப் போகும்.பால் மாடுகளையும் எங்களவர்கள் விட்டு வைப்பதில்லை.வண்ணம் பூசப் பட்ட மாடுகள் வரிசையாக வந்து நிற்கும்.கொம்பில் கட்சி சாயம் பூசப்பட்ட மாடுகள் அன்று ,ஒரு ஊரில், எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு என்பதை அறிவித்துவிடும்.ஒவ்வொரு மாடாக , கயிறு வடத்தால் இரு பக்கமும் பூட்டப்பட்டு, கிட்டத்தட்ட 30 ,40 நபர்களால் இரு பக்க கயிறும் இழுத்துப் பிடிக்கப்பட்டு ,ஒரு வித்தியாசமான குச்சில் கட்டப் பட்ட பொம்மைக் கொண்டு மாடு முன் பக்கம் வைத்து மிரட்டி,வெகுண்டெழுந்த ஏர் எருதுகள் இழுத்துக் கொண்டு ஓடும்போது,விரட்டியபடி கயிர் பிடித்த மக்களும் ஓடுவார்கள்.ஜல்லிக்கட்டு இல்லாத எம் ஊரின் எளிமையான ஜல்லிக்கட்டு அது.இந்த முறை ஊருக்கு போன போதும் நான் பார்த்து மகிழ்ந்தது,என் சிறு வயது பரவசங்களை என்னுள் பாதுகாத்து வைத்திருந்தது.அங்கும் ஏர் உழ இப்போ டிராக்ட்டார் வந்து விட்டதால் மாடுகளின் எண்ணிக்கை கணிசமாய் குறைந்திருந்தது.நவீன இயந்திர வளர்ச்சியால்,போக போக இந்த நிகழ்வு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.ஆமாம் அது என்ன எழுத்தாட்டம் என்று எமக்கு ஏனைய நாள் சந்தேகம் உண்டு..எருதாட்டம் என்பதுதான் மருவி எழுத்தாட்டமானதோ நான் அறியவில்லை!

எது எப்படியோ..மது வாசனை நிரம்பியக் கூட்டம்,மாதுகளின் தாவணி அணிவகுப்பு,விடலைகளின் விளையாட்டுகள் என என்னுள் எஞ்சி இருக்கின்றன ஏனைய நினைவாட்டங்கள் என் ஊர் எழுத்தாட்டங்களில்!

ஜனவரி 22, 2011 at 5:42 பிப 2 பின்னூட்டங்கள்

எல்லைகள் போடப்பட்ட போதும்!

இருவீட்டு சண்டையில்
எல்லைகள்
போடப்பட்ட போதும்
ஏதுமறியாமல்
எல்லைகள் தாண்டி
எதிர் வீட்டு வாசலை
மிதிக்கிறது
குழந்தையின் புன்னகை.

ஜனவரி 6, 2011 at 11:00 முப 9 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: