Posts tagged ‘தாய்மை’
தாய்மையை விட மேன்மை ஆண்மை!
வயிற்றில் கரு சுமந்தவளையோ
கையில் குழந்தை சுமந்தவளையோ
அடிக்கடி காண நேர்கிறது
எனது பேருந்து பயணங்களில்!
சுமையை சுமந்தபடி
கால் இடறி ஏறும் தாய்கள்
தவறி கூட நிற்பதில்லை
தாய்மார்கள் இருக்கை அருகில்!
அப்படியே நின்ற போதும்
மனம் இளகி எழுவதில்லை
மகராசிகள் எவரும்!
ஆணில் ஒருவன்தான்
அப்பொழுதும் எழுகின்றான்
தாயவளுக்கு இருக்கை தர!
தாய்களை விடவும்,தந்தைகளிடமே
நிரம்பி இருக்கிறது
அதிக பட்ச தாய்மை உணர்வு!
அன்னையர் தினம்…
கணவனை சுமந்து
கரு சுமந்தாய்!
கணவனை விடவும்
கருமேல் காதல் சுமந்தாய்!
வாந்தியெடுத்து,வலிதாங்கி
கரு வளர்த்தாய்!
கருவை உருவாக்கி
பிரசவித்தாய்!
பாசம்காட்டி,பாலூட்டி
வளர்த்தெடுத்தாய்!
மழலைக் குறும்பை மனமகிழ்ந்து
பார்த்து ரசித்தாய்!
அப்பா அடிக்கின்ற தருணம்
அதைத்தடுத்து காவல் நின்றாய்!
உனக்கென கனவின்றி
பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!
பிள்ளை மனம் பூரிக்க
திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!
இன்று பேரக்குழந்தை உன் மடியில்
தாயே..
உலகம் என்றுமே உன் காலடியில்!
கொலையும் செய்வாள் தாய்!
- தம் உயிரைக்
கொடுத்தேனும்
பருந்திடம் இருந்து
தம் குஞ்சுகளை
காப்பாற்ற
பதறித் துடிக்கிறது
தாய்க்கோழி!
- கோழிக் குஞ்சின்
உயிர் பறித்து
பசியால் வாடும்
தம் குஞ்சுகளுக்கு
பசியாற்ற
பாய்ந்து தாக்குகிறது
பருந்து!
தனதாக்கிக் கொள்கிறது குழந்தை!
எனக்கு
சைகை காட்டி
நீ பக்கத்து வீட்டு
பாப்பாக்கு
பச்சக் கென்று
வைக்கிறாய்
முத்தம்!
நீ எனக்கிட்ட
முத்தத்தை
தட்டி
தனதாக்கிக் கொள்கிறது
குழந்தை!
Blog எனும் கரு சுமந்து..
Blog ஆரம்பித்த போது
முதல் முறைக் கருத்தரித்த
ஓர் தாயின்
இனம்புரியா மகிழ்ச்சி.
ஒவ்வெர்ரு நாளும்,ஏதேனும் எழுதி
இற்றைப்படுத்தி
எத்தனை போஸ்ட்
எழுதியிருக்கோம் என்று
எண்ணிடும் போது
இருக்கிறதே..அப்பப்பா
வளரும் கருவை
வயிற்றை தடவித்தடவிப்
பார்த்து
தன்னில் தன்நிகரற்ற
சுகம் கொள்வாளே ஓர் தாய்
அதே சுகம்.
Blog தரவரிசையில்
தரம் உயரும் போதெல்லாம்
தன் வயிற்றின் உள்ளிருக்கும்
குழந்தையின்
ஆரோக்கியமான, வளர்ச்சி குறித்த
ஓர் அன்னையின்
எதிர்ப்பார்ப்பு.
நண்பர்கள்
பாராட்டியும்,திட்டியும்
விமர்சித்தும்
எழுதும் பின்னூட்டங்கள்
அனைத்தும்
ஓர் தாய்க்கு
டாக்டர் தரும் அட்வைஸ்.
தமிழ்மணம்,தங்லீஷ்
தமிழ் Blog வளர்க்கும்
கண்ணியமானோர் பணி
கரு வளரும் சமயம்
ஓர் தாய்க்கு
இன்னோர் தாய் செய்யும்
இணையில்லா ஈகை.
ஆனந்த விகடன்
யூத்புல் விகடன்
குட் ப்லாக்கில் படைப்பு
தேர்வாகும் போதெல்லாம்
கரு நன்றாய் வளர
விட்டமின் மாத்திரை
எடுக்கும்
ஓர் தாயின் வீரியம்.
இப்படி
பார்த்து,பார்த்து
Blog எழுதி
பக்குவமாய்
வளர்த்தெடுத்த
இந்தத் தாயின் கரு
இன்று இருநூறாவது
போஸ்ட் சுமக்கிறது.
இந்தத் தாயின் கரு
நன்றாய் இருக்க
நலமுடன் சிறக்க
வளமுடன் பிறக்க
இதுவரை
ஆதரவு நல்கிய
அனைவர்க்கும் நன்றி..
மென்மேலும் அனைவர்
ஆதரவையும்,அக்கறையையும்
எதிர்ப் பார்த்து கரு சுமக்கும்
ஓர் தாய்..