Posts tagged ‘படைப்பு’
எச்சில் சோறு தின்றவள்!
எச்சில் சோற்றை
எங்கோ தின்றவள்
என்னை எச்சமாய்
ஈன்றெடுத்து
எச்சில் இலைகளோடு
எரிந்து விட்டுப்போகிறாள்
குப்பைத்தொட்டியில் கேட்கும்
குழந்தையின் குரல்!
நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!
மலரை சுவைக்க வரும்
வண்டுபோல என் வருகை ஏனோ
சாதுவாயிருக்கிறது!
பின் பூனையிடம் மாட்டிய
எலிபோல விளையாட்டு
வேகமெடுக்கிறது!
புலியென மாறி பாய்ந்து
வெறிகொண்டு மானை சிராய்த்து
கடித்து வைக்கிறேன்
கொஞ்சம் மூர்க்கமாய்!
யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு
உன்னை தாக்கி மகிழ்கிறேன்
கொடூரத்தின் உச்சமாய்!
நீ தாக்குதலை எதிர்கொண்டு
தயங்காமல் நிற்கிறாய்
நிராயுதபாணியாய் நின்றபடி
இன்னும் தாக்க சொல்கிறாய்!
சாது போல இருந்தவள் என்னை
மோத சொல்லி கேட்கிறாய்!
தாக்குதலை தொடுத்து விட்டு
குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்
பூவென இருந்து கொண்டு
நீ புலியை சாய்த்து வெல்கிறாய்!
என்ன மாயம் செய்தாயோ
நான்கு சுவற்றுக்குள்
நடக்கும் போரில்!
வெயிலில் பெய்த மழை!
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்!
சிறுவயது நினைவை
சீண்டி சொல்கிறது
வெயிலோடு பெய்த
மழை!
பவர் கட் இனி இல்லை!
மின்சாரப் பற்றாக்குறை
உன் வீட்டிற்கு மட்டுமில்லை
இருட்டான உன் வீட்டை
எப்போதேனும் பார்க்கிறேன்
அப்போதெலாம் அறிகிறேன்
வீட்டில் நீ இல்லையென்று!