Posts tagged ‘பணக்காரன்’

ஏழைகள் நாட்டில்!

நல்ல உடை கிழிக்கப்பட்டு
நவநாகரிகம்
ஆகிப்போகிறது
பணக்காரன் வீட்டில்!
கிழிந்த உடையை
தைத்துப் போட
காசில்லா ஏழைகள் நாட்டில்!

ஒக்ரோபர் 7, 2011 at 11:56 முப பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர்…கண்ணீர்!

பணக்கார பங்களாவில்

அழகுக்காய்

கொட்டுகிறது தண்ணீர்!

அருகாமை குடிசைகளில்

தண்ணீர் வேண்டி

அரசுக்கு மனுபோட்டு

இயலாமையில் மக்கள் கண்ணீர்!

 

செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக

வராத மனம்!

பிச்சைக்காரனுக்கு

ஒரு ரூபாய் போட

வராத மனம்

கோவில் உண்டியலில்

கொட்டுகிறது கோடிகளை !

ஓகஸ்ட் 9, 2011 at 10:39 முப பின்னூட்டமொன்றை இடுக

பளபள பளிங்கு அரண்மனை!

பள பள பளிங்கு

அரண்மனையில்

படுத்து

கிடக்கிறான்

களிப்பில்.

ஓட்டை விழுந்த

குடிசைக்குள்

ஒய்யாரமான கனவு!

ஜூலை 25, 2011 at 11:41 முப 5 பின்னூட்டங்கள்

அழுக்கு உள்ளம் அடுத்தவனை சொல்கிறது!

நிறத்தை பார்த்திடுவார்

இவன் கறுத்த நிறத்தான்

அவனாய் இருப்பானோ என்றுரைப்பார்!

ஆடையை கண்டிடுவார்

இவன் ஏழை அழுக்கன்

நாகரிகமில்லாதவன் என்றுரைப்பார்!

சமுதாய துயர்கண்டு

ஆவேசப்படுகிறவனை

அறிவில்லாதவன் என்றுரைப்பார்!

சமூகத்தில் உயர்ந்தவனை

தகுதியில் சிறந்தவனை

பணத்திமிரில் ஆடுகிறான் பாரென்பார்!

சாதியை தேடியறிந்து

இவன் இழிகுலத்தான்

இப்படித்தானிருப்பான் என்றுரைப்பார்!

எல்லாத்தையும் சேர்த்து

ஒற்றைச்சொல்லில் உதிர்த்திடுவார்

அது அவன் சாதி புத்தி!

கறுத்த உள்ளத்தையும்

அழுக்கான மனதையும்

அறிவிலி சிந்தனையும்

உள்ளுக்குள்ளே அமர்த்திக்கொண்டு

ஊரை வசை பாடுகின்றார்

ஊருக்குள்ளே இவர்

பெரிய மனுசனாம்..உயர் சாதிக்காரனாம்!

ஜூலை 20, 2011 at 10:42 முப 3 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: