Posts tagged ‘பாதுகாப்பு’

முதிர்கன்னி ஆனவளுக்கு!

  • வாசல் தேடி வந்து

பொண்ணு கறுப்பென்றான்

ஒருவன்

கலையில்லை யென்றான்

மற்றொருவன்

ஒல்லி என்றான்

இன்னொருவன்.

இவளுக்கு பிடித்திருக்கிறது

வந்தவர்கள் ஆயிரம் பேர்!

  • வாசல்தேடி வந்தவனை

வசதியில்லை என்கிறாள்

உயரமாய் இருந்தால்

பரவாயில்லை என்கிறாள்

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டுகிறேன் என்கிறாள்.

இவளின் புறக்கணிப்பில்

சென்றவர்கள் ஆயிரம் பேர்!

  • காலம் செல்கிறது

கட்டளை தளர்கிறது.

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டாமென்கிறாள்.

உயரம் குறைந்தாலும்

பரவாயில்லை என்கிறாள்.

வசதி இல்லாவிடினும்

வாழ்வித்தால் போதுமென்கிறாள்.

வரன்

தேடுகிறார்கள்.

வருகிறது

வரன்

இரண்டாம் தாரமாய்

முதிர்கன்னி ஆனவளுக்கு!

ஜனவரி 11, 2011 at 8:38 முப 18 பின்னூட்டங்கள்

அம்பலமான ராணுவ ரகசியம்-அலறிய அமெரிக்கா

அமெரிக்கா,ஆப்கானிஸ்தானுக்கு எதிராகப் புரிந்த போரில் என்னென்ன நடந்தது,அமெரிக்க ராணுவத்தால் அழிக்கபட்ட அப்பாவி ஆப்கான் மக்கள்,கணக்கில் வராத மனிதப் படுகொலைகள் அதுப்பற்றிய காணொளிகள் மற்றும் முக்கியத் தகவல்கள் என்பனப் போன்ற 90,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தின் தெளிவான ரகசியத் தகவல்களை Afghan War Diary எனும் தலைப்பில் லீக் பண்ணியிருக்கிறது wikileaks எனும் இணையத்தளம்.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய லீக் என்று பேசப்படுகிறது.இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் நாட்டின் பாதுகாப்புக் கருதி ஆட்டம் கொண்டிருக்கிறது.

காணொளி:

அதுப்பற்றிய மேற்ப்பட்ட செய்திக்கு:

http://www.bbc.co.uk/news/world-us-canada-10770682
http://wikileaks.org/

ஜூலை 28, 2010 at 10:01 முப 2 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: