Posts tagged ‘பிள்ளை’

அன்னையர் தினம்…

கணவனை சுமந்து

கரு சுமந்தாய்!

கணவனை விடவும்

கருமேல் காதல் சுமந்தாய்!

வாந்தியெடுத்து,வலிதாங்கி

கரு வளர்த்தாய்!

கருவை உருவாக்கி

பிரசவித்தாய்!

பாசம்காட்டி,பாலூட்டி

வளர்த்தெடுத்தாய்!

மழலைக் குறும்பை மனமகிழ்ந்து

பார்த்து ரசித்தாய்!

அப்பா அடிக்கின்ற தருணம்

அதைத்தடுத்து காவல் நின்றாய்!

உனக்கென கனவின்றி

பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!

பிள்ளை மனம் பூரிக்க

திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!

இன்று பேரக்குழந்தை உன் மடியில்

தாயே..

உலகம் என்றுமே உன் காலடியில்!

மே 8, 2011 at 9:51 முப 2 பின்னூட்டங்கள்

வீரவணக்கம்!

 

கணவன் இறந்திட்டால் என்ன

என் மகன் இருக்கிறான்.

அழைத்துச்செல்லுங்கள் அவனை

போர்முனை நோக்கி..

என்றபோது

புன்முகம் மாறாது

புறப்பட்ட மகனையும்

இன்முகம் மாறாது

அனுப்பிய தாயையும்

புறநானூற்றில் கண்டேன்.

—–000—–

நின் புதல்வனை

தமிழ் காக்க அனுப்பி

தமிழன் மானம் காக்க

வளர்த்து

ஈழம் முழுக்க

வீரம் விளைய

தேசியத் தலைவனாய்

புறமுதுகு காட்டாத

புறநானூற்று வீரத்தை

பார் போற்ற-உம்மால்

இந்நூற்றாண்டில்

கண்டேன்!

தமிழுக்கு தலைவனை தந்தவளே…எம் தாயே …இன்று உம் உயிர் பிரிந்திருக்கலாம்..

இத்தரணி உள்ளவரை,தமிழது உள்ளவரை,உம் நினைவுகள் மறையாது..நிறைந்திருக்கும்

எங்கள் நெஞ்சங்களில்!!!

பிப்ரவரி 20, 2011 at 12:28 பிப 4 பின்னூட்டங்கள்

மிதியடி கனவு!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

  • இந்த சைக்கிளை

மிதிப்பது -ஓர்

ஏழைத் தகப்பனின்

வெற்றுக் கால்கள்தான்.

  • இந்த மிதிவண்டியில்

சுமத்தி இருப்பது

தன் பிள்ளைக்கான

மிதியடி கனவை!


ஜனவரி 12, 2011 at 10:08 முப 8 பின்னூட்டங்கள்

பிட்சா கார்னரில் பழைய சோறு!

  • பிட்சா கார்னரும்

ஐஸ்கிரீம் பார்லரும்

KFC சிக்கனும்

எட்டு மணி நேர

வேலையில்

ஏசி அறையில்..

பிராண்டட் சட்டை

பேன்ட்

சனி,ஞாயிறு

விடுமுறை

வீக் எண்டு பார்ட்டி

விழாக்கோலம்..

வளர்த்த வயிறை

குறைக்க ஜிம்!

 

  • நீ உண்பது

பழைய சோறு

வாழ்வது

ஓட்டை குடிசை

உடுத்துவது

கோவணம்

விடுமுறை

எடுத்ததுண்டா நீ..

இல்லாத வயிற்றுக்காய்

இரவு பகல்

உழைப்பு.

 

  • உன் கனவும் ஓர்நாள்

ஒருமித்துப் போகிறது.

உன் பிள்ளையும்

பிட்சா கார்னர்

போவதற்காய்!

ஜனவரி 8, 2011 at 10:06 முப 10 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: