Posts tagged ‘புன்னகை’

மோனோலிசா ஓவியத்திற்கு முன்னால் செல்லாதே!

மோனோலிசா ஓவியத்திற்கு

முன்னால் செல்லாதேடி நீ !

இதுவரை

புன்னைகைத்துக் கொண்டிருந்த ஓவியம்

உன் அழகை கண்டு பொறாமை கொண்டு

முகம் சுருக்கி முறைக்கிறது பார்!

ஓகஸ்ட் 20, 2011 at 10:51 முப 1 மறுமொழி

உலக சமாதானம் உன்னால் இனி!

புன்னகைக்கிறாய்..

உன் வாயில் எத்தனை

வெள்ளைப் பூக்கள்

பூத்து சிரிக்கின்றன!

உலக சமாதானத்துக்கு

வெள்ளைப்புறா

வேண்டாம் இனி.

உன்னை அனுப்பிவைக்கிறேன்!

ஜூன் 29, 2011 at 10:31 முப 10 பின்னூட்டங்கள்

என்னைப் பார் யோகம் வரும்!

  • புன்னகை தவழும்

விதவையின் முகம்.

போறக் காரியம்

உருப் படாதாம்!

  • அழுக்கடைந்த

கழுதையின் முகத்தில்

அதிர்ஷ்டத்தை

பார்க்கிறானாம்!

ஏப்ரல் 10, 2011 at 12:39 பிப 6 பின்னூட்டங்கள்

எஞ்சிய மனிதநேயம்!

என்மேல் எச்சில்

துப்பிய

ஜன்னலோரக் குழந்தை

தன் சின்னஞ்சிறு

கைவைத்து

காற்றிலிட்ட முத்தத்தில்

இன்னும் கரைந்து

போகாமல்

எஞ்சியிருக்கிறது

எனது

குறைந்தப்பட்ச

மனிதநேயம்!

ஜனவரி 10, 2011 at 10:48 முப 10 பின்னூட்டங்கள்

எல்லைகள் போடப்பட்ட போதும்!

இருவீட்டு சண்டையில்
எல்லைகள்
போடப்பட்ட போதும்
ஏதுமறியாமல்
எல்லைகள் தாண்டி
எதிர் வீட்டு வாசலை
மிதிக்கிறது
குழந்தையின் புன்னகை.

ஜனவரி 6, 2011 at 11:00 முப 9 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: