Posts tagged ‘மகளிர்’

முதிர்கன்னி ஆனவளுக்கு!

  • வாசல் தேடி வந்து

பொண்ணு கறுப்பென்றான்

ஒருவன்

கலையில்லை யென்றான்

மற்றொருவன்

ஒல்லி என்றான்

இன்னொருவன்.

இவளுக்கு பிடித்திருக்கிறது

வந்தவர்கள் ஆயிரம் பேர்!

  • வாசல்தேடி வந்தவனை

வசதியில்லை என்கிறாள்

உயரமாய் இருந்தால்

பரவாயில்லை என்கிறாள்

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டுகிறேன் என்கிறாள்.

இவளின் புறக்கணிப்பில்

சென்றவர்கள் ஆயிரம் பேர்!

  • காலம் செல்கிறது

கட்டளை தளர்கிறது.

வெளிநாட்டு மாப்பிள்ளை

வேண்டாமென்கிறாள்.

உயரம் குறைந்தாலும்

பரவாயில்லை என்கிறாள்.

வசதி இல்லாவிடினும்

வாழ்வித்தால் போதுமென்கிறாள்.

வரன்

தேடுகிறார்கள்.

வருகிறது

வரன்

இரண்டாம் தாரமாய்

முதிர்கன்னி ஆனவளுக்கு!

ஜனவரி 11, 2011 at 8:38 முப 18 பின்னூட்டங்கள்

பௌர்ணமி வெளிச்சத்தில் அமாவாசை இருட்டு …

சாரல் தெளித்த

சாலையொன்றில்

சாயங்கால நேரம்.

மழைவந்து நனைக்க

மருங்கி மதில் மீதில்

சாய்ந்து நின்றேன்.

வாடா மலரொன்றின்

வயதொத்த ஒருத்தி

சரீரம் நனைந்தும்

வாடியவளாய் இருந்தாள்.

நிலவான அவள் முகத்தில்

பொலிவில்லை.

பௌர்ணமி வெளிச்சத்தில்

அமாவாசை இருட்டு.

செக்க சிவந்ததொன்று

சிவந்தவளின் முகத்திலில்லை.

நிறங்கள் நீர்த்தவளாய்

வெறுமையை போர்த்தியிருந்தாள்.

அவள் அருகிலமர்ந்து

கேட்டேன்

ஆனாலும் உனை சுற்றி

ஆயிரம் ஆடவர் கண்.

என்னடி வைத்திருக்கிறாய்

உன்னிடத்தில்

மட்டுமென்றேன்.

சற்றே சிரித்தும்

கொஞ்சம்

முறைத்தவள் சொன்னாள்.

அறியாமலா என்னிடத்தில்

தைரியம் கொண்டு

அருகமர்ந்து பேசுகிறாய்.

ஆயிரம் ஆடவர் கண்களில்

உமதொன்றும்

உள்ளதடா!

இறந்திட்டான் என் கணவன்

எமை இத்தனைக் கண் நோக்குதடா!

ஜனவரி 9, 2011 at 10:25 முப 13 பின்னூட்டங்கள்

மழை கண்ணீர்!

  • குடையற்ற தருணங்களில்

குதூகலமாய்

உன்னை ஆரத்தழுவி

அணைக்கிறது

மழைநீர்!

  • நீ குடை பிடிக்கையில்

கோபித்துக் கொட்டுகிறது

குடையில்

மழை கண்ணீர்!

திசெம்பர் 2, 2010 at 10:36 முப 12 பின்னூட்டங்கள்

உனை விட்டுப் பிரிய மனமின்றி..

  • நீ வெட்டி வீழ்த்தும்

நகங்கள் கூட

உன்னை

விட்டுப் பிரிய

மனமின்றி

தொட்டுத் தொங்குகின்றன.

  • அறியாமையில்

மீண்டும் கடித்து

துப்புகிறாய்

உன்மேல் காதல்

கொண்ட நகத்தை.

செப்ரெம்பர் 5, 2010 at 10:00 முப 4 பின்னூட்டங்கள்

மோட்சம்

  • உயிர் ஈந்து

மோட்சம் பெற்றது

பட்டுப்புழு.

  • பட்டுமேனி

உன்னிடையில்

பாவாடையானதால்.

மார்ச் 11, 2010 at 10:51 முப பின்னூட்டமொன்றை இடுக




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: