Posts tagged ‘மதம்’
ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!
ஆள்பவனும் அரசியலால்
வாழ்பவனும்
காலாட்டிக்கொண்டு வீட்டில்!
அப்பாவி மனிதனும்
அபலைத் தொண்டனும்
அடித்துக்கொண்டு ரோட்டில்!
அருகாமையில் நீயிருந்தால்!
அருகாமையில் நீயிருந்தால்
அகிலம் கூட
சிறிதாகிறது!
சோகம் எமை சூழ்ந்தபோதும்
உம் தோள்சாய
எல்லாமே சுகமாகிறது!
சாதிகள் இல்லை
சமுதாய களைகள் இல்லை
சமத்துவம் நம்மிடத்தில் சங்கமமாகிறது!
நம் மூச்சுக் காற்று
இன்னும் முடிவுறாமல் இருப்பது
அந்து மூன்றெழுத்து
மந்திரத்தில்தான்-நட்பு!
அன்பர்கள் அனைவர்க்கும்
என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
கல்வி இனி சமச்சீராம்..சாதனை படைப்பது பொதுச்சீராம்!
- சாதிவாரி பிரித்துவைத்து
சமத்துவத்தை தூரவைத்து
குலக்கல்வி என்றுசொல்லி
குறிகிய குணம் கொண்டவர்கள்
கல்விபயிலும் இடத்தைக் கூட
கூறுபோட்ட காலமுண்டு!
- ஏழை,பணக்காரன்
என்றிலாமல்
எல்லோரும் சமமாய்
படிக்கின்ற இடத்திலே
பாராபட்சமின்றி பயில
சீருடை தந்த
சீர்மிகு காலமுண்டு!
- இனி
கான்வென்ட்டுக்கும்,
கவர்மென்ட் பள்ளிக்கூடத்துக்கும்
கல்வியிலே
இடைவெளி இல்லை
காலமது மாறியது
சமச்சீர் கல்வி வரக்கூடாது
என்றிருந்த
கயவர்கள் எண்ணம்
பரண்மீது ஏறியது!
கல்வி இனி சமச்சீராம்..சாதனை படைப்பது எல்லோருக்கும் பொதுச்சீராம்!
சாராயம்,பீடி வைத்து சாமி கும்பிடுகிறாள்!
- ஆடு வெட்டி,கோழி வெட்டி
பன்றியோடு
முப்பூசையிட்டு
சாராயம்,பீடி வைத்து
சாமி கும்பிடுகிறாள்
குலதெய்வம் கோவிலில்!
- சாமி
என் புருசனோட
குடிபழக்கத்த
மறக்க செஞ்சிடுன்னு!!
உயிர்களைக் கொல்வது பாவம்!
புத்தகம் மூடும்போது
சிக்கி
இறந்து போயிருக்கிறது
ஈ !
இறந்த பகுதியின்
எழுத்து சொல்கிறது
உயிர்களைக் கொல்வது பாவம்!