Posts tagged ‘மனம்’

தாய்மையை விட மேன்மை ஆண்மை!

வயிற்றில் கரு சுமந்தவளையோ

கையில் குழந்தை சுமந்தவளையோ

அடிக்கடி காண நேர்கிறது

எனது பேருந்து பயணங்களில்!

சுமையை சுமந்தபடி

கால் இடறி ஏறும் தாய்கள்

தவறி கூட நிற்பதில்லை

தாய்மார்கள் இருக்கை அருகில்!

அப்படியே நின்ற போதும்

மனம் இளகி எழுவதில்லை

மகராசிகள் எவரும்!

ஆணில் ஒருவன்தான்

அப்பொழுதும் எழுகின்றான்

தாயவளுக்கு இருக்கை தர!

தாய்களை விடவும்,தந்தைகளிடமே

நிரம்பி இருக்கிறது

அதிக பட்ச தாய்மை உணர்வு!

ஒக்ரோபர் 10, 2011 at 11:54 முப 1 மறுமொழி

ஏழைகள் நாட்டில்!

நல்ல உடை கிழிக்கப்பட்டு
நவநாகரிகம்
ஆகிப்போகிறது
பணக்காரன் வீட்டில்!
கிழிந்த உடையை
தைத்துப் போட
காசில்லா ஏழைகள் நாட்டில்!

ஒக்ரோபர் 7, 2011 at 11:56 முப பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர்…கண்ணீர்!

பணக்கார பங்களாவில்

அழகுக்காய்

கொட்டுகிறது தண்ணீர்!

அருகாமை குடிசைகளில்

தண்ணீர் வேண்டி

அரசுக்கு மனுபோட்டு

இயலாமையில் மக்கள் கண்ணீர்!

 

செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக

இருந்தும் இனிக்கிறது ஏனோ !

ஆறிருக்கு,ஆறுக்கான சுவடிருக்கு

ஆற்றிலே நீரில்லை!

காற்றிருக்கு,காற்றிலே

அதிகமாய் கார்பன் கலந்திருக்கு!

மரமிருக்கு,பச்சையின்றி காய்ந்துபோன

கிளைகள் மட்டும்!

பணம் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது

அங்கேயும் தண்ணீரை!

விவசாய நிலமிருக்கு

வீட்டுமனைகள் அதிகமாய் விளைந்திருக்கு!

மனிதனிருக்கிறான்,மறத்துப்போன

மனங்களோடு அங்கேயும்!

இப்போதெல்லாம் கிராமத்துக்கும்

நகரத்துக்கும் பெரிய வித்யாசமில்லை!

இருந்தும் இனிக்கிறது

ஏனோ

அது எம் சொந்தஊர்!

ஓகஸ்ட் 18, 2011 at 12:22 பிப 3 பின்னூட்டங்கள்

ரோஜாவின் வெட்கம்!

இவள் இதழ் ஒற்றி

எடுத்ததில்

ரோஜா இதழ்

வெட்கி சிவந்ததோ!

ஜூலை 28, 2011 at 10:25 முப 1 மறுமொழி

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: