Posts tagged ‘மழலை’
வெயிலில் பெய்த மழை!
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்!
சிறுவயது நினைவை
சீண்டி சொல்கிறது
வெயிலோடு பெய்த
மழை!
எங்கிருந்து வருகிறதோ!
வண்ண மீன்களை
வளர்ப்பு பிராணிகளை
காணும் போது
என்னையும் அறியாமல்
எங்கிருந்து வருகிறதோ
குழந்தை மனசு!
புத்திர பாசம்!
- உன் பிஞ்சு விரல்
பற்றும் போதெல்லாம்
வற்றிப் போகிறது
இந்த உலகைப் பற்றிய
நினைவு!
- நீ மட்டுமே
என் உலகமாய்
நினைவு முழுக்க!
முதல் பிறந்தநாளில்!
நஞ்சு நிறையா நெஞ்சின்
பிஞ்சு விரல் பிடித்து
கொஞ்சுமொழியில்
குழந்தையோடு குலாவி
கொண்டாடுகிற
முதல் பிறந்தநாளில்
குழந்தையோடு குழந்தையானாள்
குழந்தையை பெற்றவளும்!
ஓராண்டு முன் பிரசவித்தபோது
தாயாய் இருந்தவள்!
இனி வரும் ஆண்டுகளிலும்
தாயாகவே இருப்பவள்!