Posts tagged ‘மென்னகை’
என்னைப் பார் யோகம் வரும்!
- புன்னகை தவழும்
விதவையின் முகம்.
போறக் காரியம்
உருப் படாதாம்!
- அழுக்கடைந்த
கழுதையின் முகத்தில்
அதிர்ஷ்டத்தை
பார்க்கிறானாம்!
எல்லைகள் போடப்பட்ட போதும்!
இருவீட்டு சண்டையில்
எல்லைகள்
போடப்பட்ட போதும்
ஏதுமறியாமல்
எல்லைகள் தாண்டி
எதிர் வீட்டு வாசலை
மிதிக்கிறது
குழந்தையின் புன்னகை.