Posts tagged ‘ரஜினி’
கமலுக்கு இது தேவைதான்
கமல் என்றாலே நல்ல நடிகர்,சினிமாவில் புது முயற்சிகளின் பிரம்மா, சர்ச்சைகளின் நாயகன் என்பது எல்லோரும் அறிந்தது. கமல் இருக்கும் இடத்தில் சர்ச்சை இருக்கும் என்று பத்திரிக்கைகள், ஊடகங்கள் சொன்னதலோ என்னவோ அதையே தனக்கு சாதகமாக கமலும் பயன்படுத்த தொடங்கி விட்டார். எந்த எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தை கற்றவரைப்…..
மேலும்..
500 வது பதிவு – வினைத்தொகை!
வேடிக்கையாகத்தான் எழுத ஆரம்பித்திருந்தேன்..பின்னர் அதுவே ஒரு வாடிக்கை ஆகிவிடும் என்பதறியாமல்!
சிறுவயதில் தம் மகற்கு ,சேமிப்பு பழக்கத்தை கற்று தருவதற்காக ,பெற்றோர்கள் வாங்கித்தரும் உண்டியலைப் போல்தான், என் தமையன் உருவாக்கி தந்தது இந்த வலைத்தளமும்..நீதான் கிறுக்குவியே..அதை இங்கே கிறுக்குடா ..உனக்குன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்,அதில் உமது எழுத்துகள் சேமிப்பாகட்டும் என்று சொல்லி…
உண்டியலில் ஒவ்வொரு நாளும் பத்து பைசா,ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என கையில் கிடைத்ததை கொண்டு ரொப்பி,பார்த்து பார்த்து சேமித்து,குலுக்கி பார்த்து மனமகிழ்ந்து,அதன் கனத்தினை கையில் நிறுத்திப் பார்த்து..ஆஹா..நிரம்பிக்கொண்டிருக்கிறது..என பெருமகிழ்வு கொண்டு,பின்னொருநாளில் ,உண்டியல் நிரம்பி இருக்கிறது ..உடைத்துப் பார்ப்போமென,உடைத்து எண்ணிலடங்கா சில்லறைகளை எண்ணிடும் வேளையில் ..நாமா சேர்த்தோம் இவ்வளவு பணத்தை.. என்று மனதில் வருமே ஓர் மட்டற்ற மகிழ்ச்சி.. அதே மகிழ்ச்சிதான் இன்று எம்மை ஆட்க்கொண்டிருக்கிறது..
ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாய் கிறுக்கி..நாமா எழுதிவிட்டோம் 500 பதிவுகள் எனுமளுவுக்கு என்னை பிரமிக்க செய்கிறது ..பேரானந்தம் சூழ்கிறது.
நானும்,எழுதுகிறேன் என்பதில் தொடங்கி ,நல்லாத்தான் எழுதுறீங்க..தொடருங்க..என சொல்லிடும் பின்னூடங்களில் மனதை பறிகொடுத்து,வாழ்த்துக்கள் நண்பரே..வளர்க என அன்பர்கள் சொல்லிட கேட்டு,இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என எமை செதுக்கும் சிற்பிகளின் ஆலோசனை பெற்று,இது ரொம்ப மொக்கை என நிராகரிப்போரின் கருத்துகள் ஏற்று,கிறுக்கும் ஆர்வம் என்னில் ஓர் கிறக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
கிறுக்கிகொண்டிருக்கிறேன்,கிறுக்கினேன்,கிறுக்கி கொண்டே இருப்பேன் எனுமளவுக்கு அன்பர்களின் ஆதரவு என்னை ஆழமாக்கி விட்டது.எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது.
அன்பர்கள் ஒவ்வொருவரின் பெயராக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை கொண்டேன்…நேரமின்மையால் எழுத இயலவில்லை..இருந்தாலும்..எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..இந்நன்நாளில்!
—————————————————————————————————————————————
சுயபுராணம் போதும் …எதாவது விஷயம் இருக்கா? என்போருக்காக..
நான் 500 வது பதிவெழுதும் சமயத்தில் ,திரைப்படங்களுக்கான தேசிய விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது!அதில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ் சினிமா அதிக அளவில், தேசிய விருதுகளை வாங்கிக் குவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது!ஒரு தமிழனாய் கர்வப்பட வைத்திருக்கிறது!விருது வென்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்!
விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த படம் : ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு : தினேஷ் (ஒத்த சொல்லால… ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (ஆடுகளம்)
சிவராம் காரந்த் விருது : ஆடுகளம்
சிறந்த பொழுதுபோக்கு படம் : தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம் : சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு : மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை : சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை : சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு : சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம் : ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர் : விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி விருது : வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).
அ.தி.மு.க வை ஆதரித்து ரஜினி பிரச்சாரம்!
நாளை முதல் அ.இ.அ.தி.மு க விற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று ,இன்று திடீர் அறிவிப்பு செய்திருக்கிறார் ரஜினி.இது தி.மு.க கூட்டணியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது..நேற்று சோ மூலம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட ரகசிய சந்திப்பின் ஊடாக இந்த முடிவு ரஜினியால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!