Posts tagged ‘வறட்சி’

மனிதம் மரணித்துப்போன சமுதாயம்!

(என்னை பாதித்த புகைப்படம்)

உண்ண உணவற்ற

இவர்களின் நிலைதான்

இப்புகைப்படத்தைப்

பார்க்கும் போது

எழுத வார்தையற்ற

என் நிலையும்!

இச் கொட்டுவதைதவிர

வேறெதுவும்

செய்ய இயலா இயலாமையில்

நானும் என் மனிதாபிமானமும்

மனிதம் மரணித்துப்போன

இந்த சர்வதேசத்தில்!

ஒக்ரோபர் 4, 2011 at 10:47 முப பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர்…கண்ணீர்!

பணக்கார பங்களாவில்

அழகுக்காய்

கொட்டுகிறது தண்ணீர்!

அருகாமை குடிசைகளில்

தண்ணீர் வேண்டி

அரசுக்கு மனுபோட்டு

இயலாமையில் மக்கள் கண்ணீர்!

 

செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக

இருந்தும் இனிக்கிறது ஏனோ !

ஆறிருக்கு,ஆறுக்கான சுவடிருக்கு

ஆற்றிலே நீரில்லை!

காற்றிருக்கு,காற்றிலே

அதிகமாய் கார்பன் கலந்திருக்கு!

மரமிருக்கு,பச்சையின்றி காய்ந்துபோன

கிளைகள் மட்டும்!

பணம் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது

அங்கேயும் தண்ணீரை!

விவசாய நிலமிருக்கு

வீட்டுமனைகள் அதிகமாய் விளைந்திருக்கு!

மனிதனிருக்கிறான்,மறத்துப்போன

மனங்களோடு அங்கேயும்!

இப்போதெல்லாம் கிராமத்துக்கும்

நகரத்துக்கும் பெரிய வித்யாசமில்லை!

இருந்தும் இனிக்கிறது

ஏனோ

அது எம் சொந்தஊர்!

ஓகஸ்ட் 18, 2011 at 12:22 பிப 3 பின்னூட்டங்கள்

தூரத்துக் குரல்!

  • தாகமா?

தொண்டை வறண்டுடுச்சா?

உடலுக்கு குளிர்ச்சி

தரும்

இளநீர் சாப்பிடுங்கோ !

  • வறுமையின் தாகம்

போக்க

வேகும் வெயிலில்

உடல் சூடாக

நின்று கொண்டு

இளநீர் விற்கும்

தொண்டை வறண்டவனின்

தூரத்துக் குரல்!

ஏப்ரல் 16, 2011 at 7:53 முப 2 பின்னூட்டங்கள்

முடி வெட்டிய மரம்!

முடி வெ(கொ)ட்டிய

மரங்களைக்

கண்டேன்.

இலையுதிர் காலம் !

 

மார்ச் 27, 2011 at 11:52 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: