Posts tagged ‘வான்’

என்ன தவம் செய்தாயோ!

ஏ மழையே !

உனக்கு மட்டுமே

பொருந்திப்போகிறது

வற்றாத இளமையும்

மறுபிறவி மகிமையும்!

மழையென பிறந்து

ஆவியென வளர்ந்து

மேகமென மீண்டும்

கருவுகிறாய்

என்னும் பதினாறை

உன்னுள் வைத்துக்கொண்டு..

மீண்டும் மழையாகி

நிறைகிறாய் இம்மண்ணடியில்!

ஏ மழையே !

என்ன தவம் செய்தாயோ

இவ்வாரம் நீ பெறவே!

ஒக்ரோபர் 3, 2011 at 10:52 முப பின்னூட்டமொன்றை இடுக

இன்று பிறந்த மழையே !

இடியென அலறுகிறாள்

பிரசவ வலியில்

உன் வான் அன்னை!

–0O0—

வலியிலும் மின்னலென

மலர்கிறாள்

தம் மடி சுமந்த ம(ழை)லை

உன் முகம் காண !

–0O0—

கருமேகமென

அவள் தேகம்

கருத்திருந்த போதும்

உன்னை வெளிர் தேகமாய்

பெற்றெடுத்து

பெருமை பொங்குகிறாள் !

–0O0—

இன்று பிறந்த மழையே

எத்தனை நாள்

உன் அன்னை மடியில்

கருவுற்று  காத்துக்கிடந்தாயோ

உன் தந்தைமண்ணைக் காண !!

செப்ரெம்பர் 29, 2011 at 11:04 முப 3 பின்னூட்டங்கள்

நிலவைக்காட்டி சோறூட்டி!

  • நீ நிலவைக்காட்டி

நம் மழலைக்கு

சோறூட்டும் போதெல்லாம்

அவள் அழுகை

நிறுத்தி

ஆனந்தமடைவது கண்டு

ஆச்சர்யமுற்றிருக்கிறேன்!

  • தம் தாயின்

முகத்தை

வானிலே வைத்தது

யாரென்று

இன்பமுற்றிருக்குமோ

நம் குழந்தை..

நிலவைக்கண்டு!

பிப்ரவரி 28, 2011 at 9:15 முப 10 பின்னூட்டங்கள்

ஓவியர்களின் ஆவிகள் உலவுகின்றன!

மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்

மதுவின் மயக்கத்தில்

வான்கா வந்தானோ!

வண்ணம் தோய்த்து சென்றானோ!

சற்றுநேரம் காத்திருக்க

தளர்நடையில்,தாடியுடன்

டாவின்சி வந்தான்

மோனோலிசா முகம் வரைந்து சென்றான்!

நடுவானில் மதியநேரம்

குறு குறுவென வரைந்தான்

குச்சு மீசைக்காரன்

குறும்புக்கார டாலி!

மாலைபொழுது மதிமயக்க

பிக்காசோ வந்திடக் கண்டேன்

வண்ணத்திட்டுகள் ஆங்காங்கே

வரைந்திடவும் கண்டேன்!

சிற்பியின் செதுக்கலில்

சிக்குண்ட கற்கள்

ஆங்காங்கே-சிதறிட

ஆண்ஜெலோ தெரிந்தான்.

பின்னிரவு நேரம்

இருட்டைக் கிழிக்கும் ஒளியாய்

தூரிகைத் துளிகள்

தெளிக்க ரெம்ப்ரண்ட் வரைந்தான்..

மாறி மாறி

வண்ணமடிக்க

வருகின்றனரோ ஓவியரும்!

ஒரே கான்வாஸில்

உலகப்புகழ் ஓவியங்கள்!

ஏ வானமே!

ஓவியனின் ஆவிகள்

உன்னுடன்தான் அலைகின்றனவோ!!

ஒக்ரோபர் 23, 2010 at 10:58 முப 19 பின்னூட்டங்கள்

இருட்டின்றி இருக்கும் உலகு.

  • உன் முகப்பொலிவு பார்த்து

சூரியன் என்றேன்.

  • சூரியன் ஆண் வர்க்கம்.

நிலவே பெண்..

அது அறியாமல்

கள்வனே!

கவிதை சொல்ல வந்திட்டாயோ!!

என்றென்னை ஏளனம் செய்தாய்.

  • எப்படி அழைப்பேன்

உனை நிலவென்று.

நீ  நிலவாய் இருந்திருந்தால்..

இருட்டின்றி அல்லவா இவ்வுலகம் இருந்திருக்கும்..

பிப்ரவரி 24, 2010 at 5:47 பிப 4 பின்னூட்டங்கள்
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: