Posts tagged ‘வேளாண்மை’
தண்ணீர்…கண்ணீர்!
பணக்கார பங்களாவில்
அழகுக்காய்
கொட்டுகிறது தண்ணீர்!
அருகாமை குடிசைகளில்
தண்ணீர் வேண்டி
அரசுக்கு மனுபோட்டு
இயலாமையில் மக்கள் கண்ணீர்!
புகுந்த வீடு !
- பிறந்த வீட்டைக்
காட்டிலும்
புகுந்த வீட்டிற்கு
போக
புன்முறுவல்
பூக்கிறது பூ!
- செடியில் கொய்து
உன் கூந்தலில் இட்ட
மலர்!
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்!
நீர் உறிஞ்சி
கிளைப்பரப்பி
இலையான என்னை
இருக்கும்வரை
பச்சை மாறாமல்
பசியின்றி வளர்த்த
எம் தாய் மரத்தை
காத்திடவே
காய்ந்து நான் சறுகாகியும்
எம் தாய் காலடியில்
விழுகின்றேன்
எம் தாய் மரத்தை
காத்திடவே! உரமாகவே!
குடி கெடுத்தவன்!
- ஓர் குடும்பம்
வாழ்ந்திடவே
ஓராயிரம் குடி
கெடுத்தாய்
ஆறறிவாளனே !
- வீடு கட்டுதற்காய்
வெட்டிய மரக்கிளையில்
ஒட்டிக்கொண்டு
உயிர்வாழ்ந்த
உயிரினங்களின் புலம்பல்.