Posts tagged ‘நிர்வாணம்’

உலக அழகியை கவர்ந்து விட்டேன்!

உன்னை படம் பிடித்த

கேமரா

பரவசம் கொள்கிறது

உலக அழகியை

உட்கவர்ந்து விட்டேனென்று!

ஓகஸ்ட் 23, 2011 at 10:36 முப 2 பின்னூட்டங்கள்

நிர்வாண உலகம்!

நான்கு சுவற்றுக்குள்

என்னை

நிர்வாணமாக்கிக் கொண்டு

உலகைப் பார்க்கிறேன்.

மாசு களைந்து

உலகம் நிர்வாணமாய்

தெரிகிறது!

வெளியே வந்து

உடையனிய

அழுக்கான உலகு

ஆடைக்குள்ளே

புகுகிறது!

மனமுழுக்க

மாசு நிறைகிறது!

பிப்ரவரி 19, 2011 at 12:11 பிப 8 பின்னூட்டங்கள்

நிர்வாணம் – 15

2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தீர்வு:

ஆய்ந்ததில் அறிந்தது:

  • ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!

அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.

  • நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.

மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.

  • கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப

நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.

  • விபரீதமில்லை,

விளம்பரங்களில் நிர்வாணம்.

  • புகைப்படம் ஆபாசம் மறைத்து

அழகியலை வெளிக்கொணர்கிறது.

  • மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,

புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.

 

நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..

ஒக்ரோபர் 18, 2010 at 10:47 முப 8 பின்னூட்டங்கள்

நிர்வாணம் – 14

நிர்வாணமா?ஐயோ! எனக் கண்ணுற்ற போதே ஒதுங்கிட வேண்டாம்.

அதனில் உள்ள அழகியலை அனுபவியுங்கள்..நல்விசயங்களை வரவேற்க கரம் கொடுங்கள்.

முழுமையான போதிப்பும்,தேவையின் அவசியமும் சரியாக சென்றடையாத வரை ,ஓர் பள்ளி மாணவன் கூட பாடத்தை காமமாக எண்ணி மடமையாக பார்க்கும் இழி நிலைதான் இருக்கும்.

உதாரணமாக எனது பள்ளிப்பருவம் கூட மடமையில்,ஆராயாத,அறிவிழியாகவே இருந்திருக்கின்றது.

இன்றைய சூழலில்,கல்வியியலில் பாலியல் படங்களும்,நிர்வாண உடலியல் பாடங்களும் அதனைப் பற்றிய தெளிவான நோக்கும் திறம்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனை மறைத்து திரையிடாதீர்கள்.திறந்து விடுங்கள்..அதுவே தீர்ப்பு எழுதும்.

பல மேலை நாடுகளில் நிர்வாணம் பற்றிய அறிவியல்பூர்வமான அணுகுமுறை அனைவராலும் அனுசரிக்கப் படுகின்றது.

சன் பாத்துகள் (நிர்வாணமாய்) சாதாரணமாகி விட்டன.

ஒளித்து வைத்தவைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விட்டன.

மறைக்கப் பட்டவை மக்கள் மத்தியில் மார் தட்டுகின்றன.

அவர்களில் ஓர் தெளிவு தெரிகிறது.திறன்பட்ட அறிவு தெரிகிறது.

அதுபோல்..இங்கும் நிர்வாணம் பற்றிய தெளிவான சிந்தனை வளர வேண்டும்.முழுமையான அறிதல் வேண்டும்.

அந்நிலை வந்தால்..

நிர்வாணத்தை பற்றிய உடலியலை உள்வாங்கும் புரிதல் இருந்தால்..இங்கே..

நிர்வாணம் ஒளிப்பெறும்..நிச்சயமாக!

நிர்வாணம் நீளும்..

ஒக்ரோபர் 11, 2010 at 11:53 முப 6 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-13

கல்லூரி நான்காமாண்டு :

முந்தைய பதிவு:நிர்வாணம்-12

சமுதாய அக்கறையில் (எய்ட்ஸ்,காண்டம்ஸ் விளம்பரம்) பல் துறையில் நிர்வாணம் பயன்படுத்தப் பட்டாலும்,சமுதாய சீரழிவிற்க்கும்,பின்னடைவிற்கும் காரணமான சில துறைகளில் பயன்படுத்தப் படுவதையும் நாம் எண்ணிப்பார்ப்பது,இத்தருணத்தில் அவசியம்.

நீலப்படம் (blue film ) மற்றும் சில கேவலமான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒளிநாடாக்களும் புத்தகங்கள் போன்றவையும் ஆங்காங்கே உலாவர செய்கின்றன.

இதன் மூலக்காரணமாகக் கூட பல இடங்களில்,பல்வேறு ரீதிகளில்,பலாத்காரங்களும்,காம இச்சைகளும் அரங்கேறியிருக்கின்றன.

இதை அன்றாட செய்திகளையும்,நிகழ்வுகளாகவும் கண்ணுற்ற சமுதாய மக்கள் நிர்வாணத்தை முழுமையாக ஓர் சிறையிலிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

அதில் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அவர்களின் மனதில் “விஸ்வரூபம்” பெறுகிறது.

இந்த இடத்தில் ஓர் ரோஜாவின் அழகை ரசிப்பதை விட அதன் முள்ளின் ஆதிக்கமே ஆராயப் படுகிறது.

ஓர் படைப்பாளி என்கிற ரீதியில் என் கருத்தை சரியான இடத்தில் உதிர்த்தல் என்பது சாலச் சிறந்தது.

கலைத்துறை அல்லது இதரத் துறை,நிர்வாணத்தை ஆதாரமாகக் கொண்ட அனைத்து துறையும் ஆராயாமல் தருகின்ற அனைத்து நிர்வாணங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூற நான் முன்வரவில்லை.

சரியான இடத்தில்,தேவையான நேரங்களில் தெளிவு வேண்டும்.அதன் ஆதாரம் ஆராயப் பட வேண்டும்.அத்தியாவாசியம் தெளியப்பட வேண்டும்.

நிர்வாணம் நீளும்..

ஒக்ரோபர் 4, 2010 at 10:31 முப 6 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,592 hits