Posts tagged ‘ப்ளாஷ் பேக்’

காதல் சுவடு..காலத்தால் மறையாது..

இன்றைய நிகழ்வாய்..

ஓர் இனிய பயணம்…காஞ்சி வரை ஓர் கார் பயணம்.

மிக அருமையான தார் சாலை.

நான், நண்பர் கார்த்தி,ஜெய் மூவரும் பயணப்பட்டோம்..

கார் ஒட்டி வந்த அலுவல் நண்பர் சொன்னார்..போகும் வழியில்..

இதுதான் குயின்ஸ் லேன்ட்.

ஒரு ப்ளாஷ் பேக்.மின்னலடித்தது..

நானும்,அவளுமாய் சேர்ந்து செல்ல நினைத்த இடம் அது.

இயலாது போனது காலச்சூழல்.

பின் வெள்ளகேட் என்றொரு இடம் அலுவல் நண்பரால் மீண்டும் அறிமுகம்.

வெள்ளகேட்..வெள்ளகேட் என்பதும் அவளால் அதற்கு முன்பே எனக்கு அறிமுகம்.

அவள் கல்லூரி செல்லும் பயணப்பாதியில்…பாதிவழியில் அவ்வூர்.

அவள்..அவள் அறையிலிருந்து ஆரம்பித்த பேச்சை சற்று நிறுத்தி சொல்லும் இடம்.

வெள்ள கேட்டுக்கு அருகில் உள்ளேன்..இன்னும் பத்து நிமிடத்தில் கல்லூரி சென்றிடுவேன் என்பது.

வெள்ள கேட் கடந்து எங்கள் பயணம் தொடர்கிறது..

பல்லவன் காலேஜ்..பழக்கப்பட்ட பெயர் அவளால்..

அப்புறம்..இன்னும் சில பல கல்லூரி கடந்து எங்கள் கார் பயணம்.

பின் ரயில்பாதை கடந்து,காட்டு வழிப்பாதை..இல்லை கழனி வழிப்பாதை என்பது சரியாய் இருக்கும்.

நாங்கள் எட்ட வேண்டிய இடம்..காலாற நடை..அவள் நினைவு அப்படியே வந்து நிற்கிறது..

இப்பொழுது இருக்கும் இடம்..அவள் கல்லூரி அருகிருக்கும் என்பதை மட்டும் ,என் சிந்தைக்கு சொல்லிற்று.

முன்னெல்லாம் நான் நினைத்தால் அவள் அழைப்பாள்..இப்போ நானே நினைத்தாலும் அவளை அழைக்க இயல்வதில்லை.

இருந்தும்..சற்றும் எதிர்பாராது ஓர் அழைப்பு..அவள்தாள்..என்னவள் தான்.ஏய் எங்கிருக்கிறாய்?

என் கல்லூரி அருகாமை தான் பார்த்து விட்டு வா..

இன்றவள் இன்னொருவன் மனைவியாய்..

காதல் நினைவு காலத்தால் அழிவதில்லை..

திசெம்பர் 6, 2009 at 9:49 பிப 2 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,597 hits