Posts tagged ‘Art’

கல்லூரி காலத்து எனது கைவண்ணம் !

கல்லூரி காலத்து எனது கைவண்ணம்!

நவம்பர் 28, 2010 at 10:41 முப 20 பின்னூட்டங்கள்

ஒளிச்சிதறல் ஓவியம்(2003 )

டிஜிட்டல் ஓவியம் கற்றலின் ,ஆரம்ப முயற்சியாக 2003 ஆம் ஆண்டு நான் வரைந்தது.

நவம்பர் 15, 2010 at 10:09 முப 13 பின்னூட்டங்கள்

காலால் வரைந்த ஓவியம்!

  • என் கை வண்ணத்தைக்

கண்டு..ஆச்சர்யம்

கொண்டு

எமை ஓவியன் என்றாய்!

  • எமைக் கண்ட

மாத்திரத்தில்..

நீ கொண்ட

வெட்கத்தில்

காலால் வரைந்தாயே

உமை என்னென்று

சொல்வேன்!

 

 

நவம்பர் 6, 2010 at 10:00 முப 6 பின்னூட்டங்கள்

ஓவியர்களின் ஆவிகள் உலவுகின்றன!

மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்

மதுவின் மயக்கத்தில்

வான்கா வந்தானோ!

வண்ணம் தோய்த்து சென்றானோ!

சற்றுநேரம் காத்திருக்க

தளர்நடையில்,தாடியுடன்

டாவின்சி வந்தான்

மோனோலிசா முகம் வரைந்து சென்றான்!

நடுவானில் மதியநேரம்

குறு குறுவென வரைந்தான்

குச்சு மீசைக்காரன்

குறும்புக்கார டாலி!

மாலைபொழுது மதிமயக்க

பிக்காசோ வந்திடக் கண்டேன்

வண்ணத்திட்டுகள் ஆங்காங்கே

வரைந்திடவும் கண்டேன்!

சிற்பியின் செதுக்கலில்

சிக்குண்ட கற்கள்

ஆங்காங்கே-சிதறிட

ஆண்ஜெலோ தெரிந்தான்.

பின்னிரவு நேரம்

இருட்டைக் கிழிக்கும் ஒளியாய்

தூரிகைத் துளிகள்

தெளிக்க ரெம்ப்ரண்ட் வரைந்தான்..

மாறி மாறி

வண்ணமடிக்க

வருகின்றனரோ ஓவியரும்!

ஒரே கான்வாஸில்

உலகப்புகழ் ஓவியங்கள்!

ஏ வானமே!

ஓவியனின் ஆவிகள்

உன்னுடன்தான் அலைகின்றனவோ!!

ஒக்ரோபர் 23, 2010 at 10:58 முப 19 பின்னூட்டங்கள்

நிர்வாணம் – 15

2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தீர்வு:

ஆய்ந்ததில் அறிந்தது:

  • ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!

அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.

  • நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.

மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.

  • கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப

நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.

  • விபரீதமில்லை,

விளம்பரங்களில் நிர்வாணம்.

  • புகைப்படம் ஆபாசம் மறைத்து

அழகியலை வெளிக்கொணர்கிறது.

  • மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,

புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.

 

நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..

ஒக்ரோபர் 18, 2010 at 10:47 முப 8 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: