Posts tagged ‘sculpture’
ஓவியர்களின் ஆவிகள் உலவுகின்றன!
மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்
மதுவின் மயக்கத்தில்
வான்கா வந்தானோ!
வண்ணம் தோய்த்து சென்றானோ!
சற்றுநேரம் காத்திருக்க
தளர்நடையில்,தாடியுடன்
டாவின்சி வந்தான்
மோனோலிசா முகம் வரைந்து சென்றான்!
நடுவானில் மதியநேரம்
குறு குறுவென வரைந்தான்
குச்சு மீசைக்காரன்
குறும்புக்கார டாலி!
மாலைபொழுது மதிமயக்க
பிக்காசோ வந்திடக் கண்டேன்
வண்ணத்திட்டுகள் ஆங்காங்கே
வரைந்திடவும் கண்டேன்!
சிற்பியின் செதுக்கலில்
சிக்குண்ட கற்கள்
ஆங்காங்கே-சிதறிட
ஆண்ஜெலோ தெரிந்தான்.
பின்னிரவு நேரம்
இருட்டைக் கிழிக்கும் ஒளியாய்
தூரிகைத் துளிகள்
தெளிக்க ரெம்ப்ரண்ட் வரைந்தான்..
மாறி மாறி
வண்ணமடிக்க
வருகின்றனரோ ஓவியரும்!
ஒரே கான்வாஸில்
உலகப்புகழ் ஓவியங்கள்!
ஏ வானமே!
ஓவியனின் ஆவிகள்
உன்னுடன்தான் அலைகின்றனவோ!!
நிர்வாணம் – 15
2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
தீர்வு:
ஆய்ந்ததில் அறிந்தது:
- ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!
அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.
- நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.
மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.
- கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப
நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.
- விபரீதமில்லை,
விளம்பரங்களில் நிர்வாணம்.
- புகைப்படம் ஆபாசம் மறைத்து
அழகியலை வெளிக்கொணர்கிறது.
- மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,
புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.
நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..
நிர்வாணம் – 14
நிர்வாணமா?ஐயோ! எனக் கண்ணுற்ற போதே ஒதுங்கிட வேண்டாம்.
அதனில் உள்ள அழகியலை அனுபவியுங்கள்..நல்விசயங்களை வரவேற்க கரம் கொடுங்கள்.
முழுமையான போதிப்பும்,தேவையின் அவசியமும் சரியாக சென்றடையாத வரை ,ஓர் பள்ளி மாணவன் கூட பாடத்தை காமமாக எண்ணி மடமையாக பார்க்கும் இழி நிலைதான் இருக்கும்.
உதாரணமாக எனது பள்ளிப்பருவம் கூட மடமையில்,ஆராயாத,அறிவிழியாகவே இருந்திருக்கின்றது.
இன்றைய சூழலில்,கல்வியியலில் பாலியல் படங்களும்,நிர்வாண உடலியல் பாடங்களும் அதனைப் பற்றிய தெளிவான நோக்கும் திறம்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதனை மறைத்து திரையிடாதீர்கள்.திறந்து விடுங்கள்..அதுவே தீர்ப்பு எழுதும்.
பல மேலை நாடுகளில் நிர்வாணம் பற்றிய அறிவியல்பூர்வமான அணுகுமுறை அனைவராலும் அனுசரிக்கப் படுகின்றது.
சன் பாத்துகள் (நிர்வாணமாய்) சாதாரணமாகி விட்டன.
ஒளித்து வைத்தவைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விட்டன.
மறைக்கப் பட்டவை மக்கள் மத்தியில் மார் தட்டுகின்றன.
அவர்களில் ஓர் தெளிவு தெரிகிறது.திறன்பட்ட அறிவு தெரிகிறது.
அதுபோல்..இங்கும் நிர்வாணம் பற்றிய தெளிவான சிந்தனை வளர வேண்டும்.முழுமையான அறிதல் வேண்டும்.
அந்நிலை வந்தால்..
நிர்வாணத்தை பற்றிய உடலியலை உள்வாங்கும் புரிதல் இருந்தால்..இங்கே..
நிர்வாணம் ஒளிப்பெறும்..நிச்சயமாக!
தலைக்கவசம் அணிவீர்!!(wear helmet)
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
சிதையாமல்
மீதமிருப்பது
-இந்த சிலையில்
அந்த தலை
மட்டும்தான்.
நிர்வாணம்-3
நிர்வாணம்-சிற்பம்
Goddess Parvati – 12th century – Sarasvati Mahal Museum, Thanjavur
பண்டைய காலந்தொட்டே “நிர்வாணம்” சிற்பங்களில் நீங்கா இடம்பெற்று வந்துள்ளது.இதற்கு ஆதாரங்கள் தான் பழைய காலகோயில் சிற்பங்கள்.
சிற்பங்களில் நிர்வாண உருவங்கள்,உடலமைப்பியலிலும் சரி,அங்க இலக்கணங்களிலும் சரி,மிகை மிஞ்சியதாக,அதாவது (மார்புகள்,பின்தசைகள் போன்றவை)இயல்பு மீறிய உருவ அமைப்புடனையே தென்ப்படுகிறது. இது காண்போருக்கு கூட வாழ்வில் இருப்பதை விட அதிக்கப்படியான ஓர் வடிவமைப்பை படைத்து விட்டதாய் என்ன தோன்றும்.அதிகப்படியான விசயமாக அமைத்துவிட்டார்களோ,என்ற சந்தேகத்தையும் முன்னிறுத்தும்.
ஆனால் அது அமைக்கப்பட்ட நோக்கமோ,காண்போரை கவர்ந்திழுக்கவும்,அழகுக்கு மேலும் அணி சேர்க்கும் நோக்குடனும்,சிற்பங்களுக்கான ஓர் சீர்முறையாகக்கூட காணப்படுகிறது.
அதற்காக எதார்த்த நிலை சிற்பங்களே இல்லையா?? எனக்கூட கேள்விகள் தோன்றும்.ஏன் இல்லை..மைக்கேல் ஆஞ்சலோ வின் சிற்ப்பங்கள் அனைத்துமே எதார்தத்துடனும் சீரிய வேலைப்பாட்டுடனும்,அழகியலையும்,உணர்வுகளையுமே முன்னிறுத்தி நிற்கின்றன.எதார்த்தமான உடலமைப்பு,மாற்றம் பெறாத ,சீரிய சிற்ப முறையை முதலில் கொண்டு வந்த பெருமைக்கூட அவரையே சாரும்.
இன்றைய நிலையில் நவீன சிற்பங்களில் கூட அவரவர் எண்ணங்களுக் கேற்ப சிற்பங்கள் உயிர் பெறுகின்றன.பண்டைய கால சிற்பங்களில் நிர்வாணம் வாழ்வின் சாராம்சமான “தாம்பத்யம்”பற்றி விளக்கவும்,கடவுளின் கலை படைப்பியல்புகளைப் பற்றி விளக்கவும்,ஓர் ஆதாரமான நிலையைக் குறிப்பதாக அமைந்து வந்துள்ளது,என்பதை நாம் நடைமுறை வாயிலாகவும் அறிய இயலும்.
உதாரணமாக,முந்தைய தலைமுறையினர் மணமான புதுதம்பதியனரை “கோவில்குளம்”சென்றுவாருங்கள் என சொல்லி கேள்விப்படிருப்போம்.இன்றும் மணமானவுடன் கோவில் செல்வது நடைமுறையில் உள்ளது. “கோவில்குளம்”சென்றுவாருங்கள் என்பது,புதுமணத்தம்பதியின் அமைதிக்காகவும்,கடவுளின் அருளாட்சிக்காகவும் என்றே நம்பப்படுகிறது.ஆனால் அதன் உட்க்கருத்து அது இல்லை.
அன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்யம் பற்றியும்,களவியல் முறைகள் பற்றியும்,உடலுறவு மற்றும் வாழ்வின் சாராம்ச முறைகள் பற்றி நேரடியாக,இளையத் தலைமுறைக்கு எடுத்தியம்ப இயலாததொரு சூழல் இருந்தது.
ஆகவே அதனை மறைமுகமாக (கோயில்குளம்) விளக்கும் விதமாகவே கோயில்களில் நிர்வாண நிலையில்,கலவியில் ஈடுபடுதல்,உடலுறவின் பல்வேறு நிலைகளைக் கொண்ட சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.
குக்கிராம கோயில்கள்,தேர்கள் போன்றவற்றில் கூட இவ்வகை சிற்ப வேலைப்பாடுகளை காணலாம்.மேற்கூறிய சிற்பநிலைகளை உள்ளடக்கி புகழ்பெற்ற கோயில்களும் உள்ளன.
எ.கா .கஜுராஹோ,கோனார்க்
இதனையெல்லாம் யோசித்து பார்க்கின்றபோது,அன்றைய நிலையில், நிர்வாண சிற்பங்கள் ஓர் அறிவு போதிக்கும் விசயமாகவும்,அந்தரங்கங்களைக்கூட அசிங்கமில்லாமல் தருவதற்கோர் வடிகாலாகவும்,இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
அது மட்டுமின்றி அன்றைய காலகட்ட மக்களின் அறிவு வளர்ச்சியையும் அது எடுத்தியம்புகிறது.மக்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான ,அறிவியல் கண்ணோட்ட அணுகுமுறை இருந்ததையும் நாம் அறிய இயலுகிறது.இன்றைய நவீன காலக்கட்டங்களில் கூட அந்த அணுகுமுறை மழுங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது.அதன் வெளிப்பாடுதான்,தற்போது பல கோவில்களில்,நிர்வாண சிற்பங்களில் பாலின உறுப்புகள் உடைக்கப் பட்டுள்ளதில் புலனாகிறது..ஆனால் அன்றைய மக்கள் ஓர் தெளிவான மனநிலைக்கும்,வாழ்க்கையின் சாராம்சங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் இருந்துள்ளது தெளிவு பெறுகிறது.
அப்போ கோயில்கள்,வெள்ளப்பெருக்கு,புயல் மற்றும் இயற்க்கை சீற்றங்கள் பாதிக்கும் நாட்களில் மக்கள் தங்குவதற்கு ஓர் பாதுகாப்பு அரணாகவும் இருந்து வந்துள்ளது .இதன்மூலமும்,அந்தக்கால மற்றும் அறிவியல் அணுகுமுறை மக்களை சென்று அடைந்துள்ளது.
இப்படி நிர்வாண சிற்பங்கள் எவ்வகையில் நோக்கினும் காண்போரை கவர்ந்திழுக்கிறதே தவிர,கருத்து செறிவை முன்னிருத்துகிறதே தவிர காம இச்சை தூண்டுவதாய் இல்லை.
நிர்வாணம் வளரும்..