அன்பர்களுக்கு வேண்டுகோள்

இதுநாள்வரை எனக்கு இத்தளத்தில் ஆதரவு நல்கி வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி..நன்றி..தற்போது  இத்தளம்  www.padaipali.com என்ற முகவரியில் மேம்படுத்தப்பட்ட சேவைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது..இனி அன்பர்கள் அனைவரும் அத்தளத்திற்கு வந்து அன்புத்தொல்லை தருமாறு பாசமுடன் வேண்டுகிறேன்.

அக்டோபர் 2, 2011 at 6:44 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

உன் வெட்கம் என்னை

விலைபேசுகிறது!

என்னை தந்துவிட்டேன்

இன்னும் என்ன தரப்போகிறேன்

உன் வெட்கத்திற்கு!

அக்டோபர் 21, 2011 at 11:53 மு.பகல் மறுமொழியவும்

ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!

ஆள்பவனும் அரசியலால்

வாழ்பவனும்

காலாட்டிக்கொண்டு வீட்டில்!

அப்பாவி மனிதனும்

அபலைத் தொண்டனும்

அடித்துக்கொண்டு ரோட்டில்!

அக்டோபர் 20, 2011 at 10:43 மு.பகல் 1 மறுமொழி

எச்சில் சோறு தின்றவள்!

எச்சில் சோற்றை

எங்கோ தின்றவள்

என்னை எச்சமாய்

ஈன்றெடுத்து

எச்சில் இலைகளோடு

எரிந்து விட்டுப்போகிறாள்

குப்பைத்தொட்டியில் கேட்கும்

குழந்தையின் குரல்!

அக்டோபர் 19, 2011 at 10:37 மு.பகல் 2 பின்னூட்டங்கள்

நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!

 

மலரை சுவைக்க வரும்

வண்டுபோல என் வருகை ஏனோ

சாதுவாயிருக்கிறது!

பின் பூனையிடம் மாட்டிய

எலிபோல விளையாட்டு

வேகமெடுக்கிறது!

புலியென மாறி பாய்ந்து

வெறிகொண்டு மானை சிராய்த்து

கடித்து வைக்கிறேன்

கொஞ்சம் மூர்க்கமாய்!

யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு

உன்னை தாக்கி மகிழ்கிறேன்

கொடூரத்தின் உச்சமாய்!

நீ தாக்குதலை எதிர்கொண்டு

தயங்காமல் நிற்கிறாய்

நிராயுதபாணியாய் நின்றபடி

இன்னும் தாக்க சொல்கிறாய்!

சாது போல இருந்தவள் என்னை

மோத சொல்லி கேட்கிறாய்!

தாக்குதலை தொடுத்து விட்டு

குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்

பூவென இருந்து கொண்டு

நீ புலியை சாய்த்து  வெல்கிறாய்!

என்ன மாயம் செய்தாயோ

நான்கு சுவற்றுக்குள்

நடக்கும் போரில்!

அக்டோபர் 18, 2011 at 10:39 மு.பகல் 1 மறுமொழி

நீயிட்ட கோலம்!

நீ காலால் கோலமிட்டு

என்னைக் கடக்கிறாய்

எளிதாய்!

என் இதயம் கொண்ட

கோலத்தை

என்னென்று அறியாமல்!

அக்டோபர் 17, 2011 at 12:17 பிற்பகல் மறுமொழியவும்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 131,420 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers