Posts tagged ‘பாடம்’

அவன்.. இவன்..

  • அன்றைக்கு ஆண்டை வீட்டின்

கொத்தடிமையாய்

அவன்!

  • இன்றைக்கு கல்வியறிவில்

மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்

சமுதாயத்தில் அவன் மகன்

இவன்!

  • அன்றைக்கு சேரிக்காரன்

என்று

ஒதுக்கப்படவனாய்

அவன்!

  • இன்றைக்கு சேற்றில்

பிறந்த செந்தாமரையாய்

ஒளிமிக்க இவன்!

  • அன்றைக்கு அவன் அப்பனை

அடேய் என்றழைத்தான்

உயர்குலத்தான் என்கிற

அவன்!

  • இன்றைக்கு அவன் மகனை

வாய்விட்டு வராத வார்த்தைகளால்

சார் என்கிறான் அவனே

இவன்!

  • பணம் இருக்கிறது

படிப்பறிவில் உயர்ந்து விட்டான்

சாதி அழிந்துவிட்டது என்கிறான்

அவன்!

  • தகுதியில் உயர்ந்தபின்னும்

தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்

இழிகுலத்தான் என்று சொல்லி

கொலைவெறியில்

இவன்!

  • தாழ்த்தப்படவன் என்றறிந்தும்

படிக்கும் போது

“மச்சி “என்று

நட்பு பாராட்டியவன்

அவன்!

  • தன் குலப்பெண்ணை

காதல் கொண்டான் என்பதற்காய்

கீழ்சாதிக்கார நாய்

என்கிறான் இப்போ

இவன்!

  • பள்ளியில் படிக்கிறான்

அவனும் இவனும்

ஒன்றாய்..

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;

தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’

ஜூன் 17, 2011 at 11:57 முப 14 பின்னூட்டங்கள்

கா(ல(ல்)ச்சுவடு !

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

  • வெறுமனே

வாழ்தலில் இல்லை

வாழ்க்கை!

  • உன் பயணத்தில்

நீ பதித்துவிட்டு

போகும்

சுவடுகளில் தான்

நீ வாழ்வதற்கான

வரலாறு

தொடங்குகிறது!

மார்ச் 14, 2011 at 10:53 முப 4 பின்னூட்டங்கள்

மன்மதன் அம்பு எங்கே போனது!

திரைவிமர்சனங்களும்,நண்பர்களின் கருத்துகளும் கேட்டு விட்டு எவ்வித எதிர்ப்பார்ப்புமற்று தான் மன்மதன் அம்பை பார்க்கப் போயிருந்தேன்.எவ்வித பில்டப்,சலனமில்லாமல் படத்தின் தலைப்பு வருகின்ற போதே ஓர் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.சூர்யா ,த்ரிஷா மன்னிக்க அம்புஜா பாடல் காட்சியுடன் படம் ஆரம்பமானது.படத்திலும் நடிகையாக த்ரிஷா. பணக்கார காதலனாக மதன் மாதவன்.த்ரிஷாவின் மேல் சந்தேகப் பிராணியாக திரிகிறார்.

மாதவனின் ஹமர் கார் ஓட்டி வரும் போது த்ரிஷா ஓர் விபத்தை நிகழ்த்திவிடுகிறார்.அந்த இடத்தில் ஓர் சம்பாசனையுடன் வெறுப்பில் காதல் அவர்களுக்கிடையில் பிளவாகிறது.இப்போ .வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணத்திற்கு போயிருக்கும் த்ரிஷா,அவர் தோழியாக சங்கீதா அவரின் இரண்டு குழந்தைகள் என அங்கு கதை வருகிறது.ஹீரோ என்ட்ரி… சந்தேகப் பிராணி மாதவன் ,திரிசாவை நோட்டம் விட நியமித்திருக்கும் மேஜர் மன்னாராக கமல்.நண்பனின் மருத்துவ தேவைக்காக அவர் இந்தப் பணியை ஒப்புக்கொண்டு த்ரிஷா நல்லப் பெண்தான் என மாதவனிடம் சர்டிபிகேட் தர,இதை காரணம் காட்டி மருத்துவ தேவைக்கானப் பணத்தை மாதவன் தராதிருக்க,ஹீரோ கதையில் புது கதை பின்னுகிறார். அப்போ பணம் கிடைக்க ஆரம்பிக்கிறது.அந்தப் பின்னலில் த்ரிஷா,சங்கீதா,கமல்,மாதவன் என யார் யாரோடு பின்ணிப் போகப் போகிறார்கள் என்பதுதான் பின்னணி கதை.

விமர்சனங்களைப் படித்து ஐயோ திரையரங்கில் அமரவே முடியாதோ,அவ்வளவு மொக்கையோ என்கிற அளவுக்கெல்லாம் படம் சலிப்பத் தரவில்லை.பாடல் காட்சியமைப்புகள்  அருமை.நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.கமல் பற்றி சொல்ல தேவையில்லை.மாதவன் குடிகாரராக பின்னிஎடுதிருக்கிறார்.சங்கீதா வயசுப் பசங்களுக்கு வாவ்,அவர் பேசும் வசனங்களையும் சேர்த்து..குடும்பத்தோட போறவங்க தான் கொஞ்சம் குற்ற உணர்வோட உக்காரணும்.சங்கீதாவின் பையனாக நடித்திருக்கும் சின்னப் பையன் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறான் நடிப்பில்.

இரண்டாம் பாதி வழக்கமான கிரேசி மோகன் பாணியில் கமல் எழுதிய வசனங்கள் ,சீன்கள் நடிகர்களுக்குள் வரும் குழப்பத்தை பார்வையாளனுக்குள்ளும் இறக்கி விடுகிறது.

கமலின் மேதாவித்தனமான சில வசனங்கள் என்னை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.கதையில் ஆரம்ப காட்சிகளில் கார் ஓட்டுனராக வரும் ஈழத்து தமிழனை திரிசாவுக்கு காலுக்கு செருப்பாக நடிக்கவும் தயாராய் இருக்கிறேன் என்று சொல்வது,மாதவன் பேசும் போது தமிழ் இனி மெல்ல சாகும் ன்னு சொல்லி வசனத்தை டம்மியாக்கி பேசுவது.இன்னும் சில இடங்களில் தமிழ் தேவையில்லாமல் இழுக்கப் பட்டு தரம் தாழ்த்தப் படுவதுபோல் தோன்றுகிறது(ஏற்கனவே இந்த வேலையை தசாவதாரத்திலும் செய்திருப்பார்)..அதை தவிர்த்திருக்கலாம்.கமல் காமெடி என்றாலே, ஐயோ இப்படித்தான் (சா)கடிப்பார் என்கிற எண்ணத்தை அவரின் சமீபகால படங்கள் உணர்த்தி விடுகின்றன.கிளைமாக்ஸ் ரொம்ப ஆவரேஜ்.

“அர்ஜுனன் பார்வை மன்மதனுக்கு இல்லை..அதுதான் அம்பு குறி தவறி இருக்கிறது!”

திசெம்பர் 26, 2010 at 12:26 பிப 8 பின்னூட்டங்கள்

நிர்வாணம் – 15

2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தீர்வு:

ஆய்ந்ததில் அறிந்தது:

  • ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!

அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.

  • நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.

மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.

  • கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப

நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.

  • விபரீதமில்லை,

விளம்பரங்களில் நிர்வாணம்.

  • புகைப்படம் ஆபாசம் மறைத்து

அழகியலை வெளிக்கொணர்கிறது.

  • மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,

புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.

 

நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..

ஒக்ரோபர் 18, 2010 at 10:47 முப 8 பின்னூட்டங்கள்

இளம் தமிழச்சியின் எக்சாம் பேப்பர்

15.12.09 இன்றைய குறிப்பு….

எனக்கு பதினோராம் வகுப்பு படிக்கும்,தோழி ஒருத்தி உண்டு..உயிரானவள் என்பதை விட என்மேல் உணர்வானவள் எனலாம்.

இன்று அவளோடு உரையாடிக்கொண்டிருக்கும் போது,பாஸ் ஒரு மேட்டர் தெரியுமா?இன்னைக்கு எக்சாம்ல எஸ்ஸே எழுத சொன்னாங்க..தலைப்பு உனக்கு பிடிச்ச லீடர்?நான் யார எழுதிருப்பேன் ,சொல்லுங்க என்றாள்..சற்று முழித்தேன்..

தலைவர் பிரபாகரன் பத்தி எழுதினேன் பாஸ் என்றாளே..அப்போதான் நான் விழித்தேன்.இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் .ஏன் அவளை உணர்வானவள் என்றேனென்று!

டீச்சர் பார்த்துட்டு ஏண்டீ இப்படிலாம் எழுதிருக்கேன்னு ,கேட்டாங்க பாஸ்..எனக்கு பிடிச்சத எழுதினேன்..பிடிச்சா மார்க் போடுங்க..இல்ல விடுங்கன்னு சொல்லிட்டேன் என்றாள்..

பரவாஇல்லை தலைவர் கனவு,பள்ளிபடிப்பிலும் பதிவாகி இருக்கிறது..

தலைவர் எங்கிருந்தாலும்,உலகத்தமிழன் உள்ளங்களில் எல்லாம் உயிராய் உள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி.

ஏற்க்கப்படாத நாட்டிலும்,அவர் தோற்க்கப்பட மாட்டார்…என்பதை சொன்னது இளம் தமிழ்நாட்டு தமிழச்சியின் எக்சாம் பேப்பர் மேட்டர்.

திசெம்பர் 16, 2009 at 12:08 முப 3 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,710 hits