ஓவியர்களின் ஆவிகள் உலவுகின்றன!

ஒக்ரோபர் 23, 2010 at 10:58 முப 19 பின்னூட்டங்கள்


மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்

மதுவின் மயக்கத்தில்

வான்கா வந்தானோ!

வண்ணம் தோய்த்து சென்றானோ!

சற்றுநேரம் காத்திருக்க

தளர்நடையில்,தாடியுடன்

டாவின்சி வந்தான்

மோனோலிசா முகம் வரைந்து சென்றான்!

நடுவானில் மதியநேரம்

குறு குறுவென வரைந்தான்

குச்சு மீசைக்காரன்

குறும்புக்கார டாலி!

மாலைபொழுது மதிமயக்க

பிக்காசோ வந்திடக் கண்டேன்

வண்ணத்திட்டுகள் ஆங்காங்கே

வரைந்திடவும் கண்டேன்!

சிற்பியின் செதுக்கலில்

சிக்குண்ட கற்கள்

ஆங்காங்கே-சிதறிட

ஆண்ஜெலோ தெரிந்தான்.

பின்னிரவு நேரம்

இருட்டைக் கிழிக்கும் ஒளியாய்

தூரிகைத் துளிகள்

தெளிக்க ரெம்ப்ரண்ட் வரைந்தான்..

மாறி மாறி

வண்ணமடிக்க

வருகின்றனரோ ஓவியரும்!

ஒரே கான்வாஸில்

உலகப்புகழ் ஓவியங்கள்!

ஏ வானமே!

ஓவியனின் ஆவிகள்

உன்னுடன்தான் அலைகின்றனவோ!!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

இது எங்க ஏரியா..உள்ள வராத..ஆக்கிரமிப்பு பெண்கள் வலைப்பதிவு வாசகர்களுக்கு..

19 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ். கே  |  11:01 முப இல் ஒக்ரோபர் 23, 2010

  மேகம் மட்டும் எப்படித்தான் விதம் விதமா உருவம் எடுக்குதோ!!

  மறுமொழி
 • 3. prabha  |  2:49 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  எந்த பக்கம் உலாவுது நு சொல்லுங்க அண்ணா…..

  எனக்கு ஆவி ந பயம்…. 🙂 🙂

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  3:13 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

   எல்லாப் பக்கமும் தான் தம்பி..பயப்படாத..பாத்தா படம் வரைஞ்சி தர சொல்லிக் கேளு..ஹா..ஹா..

   மறுமொழி
 • 5. prabha  |  3:03 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  வானம் = காகிதம்
  மேகம் = ஓவியம்
  வரைந்தவர் யார் அண்ணா??..

  மறுமொழி
 • 6. படைப்பாளி  |  3:14 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  வானம் = காகிதம்
  மேகம் = ஓவியம்
  =இயற்கைதான் தம்பி ..

  மறுமொழி
 • 7. prabha  |  8:29 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  இயற்கை யை வரைந்தவர் யார் அண்ணா??..

  மறுமொழி
 • 9. puthumaipen  |  11:53 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  Nalla karpanai…. puthumaiyana kavithai….
  But oru india oviyar per kooda varala 😦

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  12:14 முப இல் ஒக்ரோபர் 24, 2010

   மிக்க நன்றி தோழி ..கிரேட் மாஸ்டர்ஸ் வரிசையில் , நம்ம நாட்டு ஓவியர்கள் யாரும் இன்னும் இடம் பெறவில்லை..

   மறுமொழி
   • 11. puthumaipen  |  10:43 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    yen raja ravi varma enna anaar?

   • 12. படைப்பாளி  |  11:03 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    ராஜா ரவி வர்மா இந்தியாவில் சிறந்த தைல வண்ண(oil painting ) ஓவியர் என்றுக் கொள்ளலாம்.உலக அரங்கில் உள்ள ஓவியர் வட்டம் அவரை கிரேட் மாஸ்டர் ஆக ஏற்றுக் கொள்ளவில்லை.

 • 13. ஜெகதீஸ்வரன்  |  8:40 முப இல் ஒக்ரோபர் 24, 2010

  அந்த மாலை நேர நிறக் கலவைகளை எந்த ஓவியனாலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

  அழகு கவிதை.

  மறுமொழி
  • 14. படைப்பாளி  |  10:39 முப இல் ஒக்ரோபர் 24, 2010

   ஆமாம் .எத்தனை நிறங்கள்..எவ்வளவு வடிவங்கள்.
   நன்றி நண்பா .

   மறுமொழி
 • 15. prabha  |  10:19 முப இல் ஒக்ரோபர் 24, 2010

  கிரேட் மாஸ்டர்ஸ் வரிசையில் நம்ம நாட்டு ஓவியர்கள் யாரும் இன்னும் இடம் பெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது…… 😦

  மறுமொழி
 • 16. vaarththai  |  12:24 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

  @ prabha

  its our fault that we didnt portray and establish our creators as great masters.
  😦

  i could add many points to justify it, but blogs often lead to misunderstandings as a same phrase could provide different dimensions based on the people’s mental state who read it then.

  with no offense

  மறுமொழி
 • 17. vaarththai  |  12:26 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

  //மஞ்சள் பூத்தக் காலைப்பொழுதில்

  மதுவின் மயக்கத்தில்

  வான்கா வந்தானோ!//

  who was under the influence of alcohol in the morning.
  vanco or yourself படைப்பாளி

  🙂

  மறுமொழி
  • 18. படைப்பாளி  |  3:19 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

   வான்கா மதுவின் மயக்கதினூடே உழன்ற மாபெரும் ஓவியன்….
   நான் வான்கா அளவுக்கு இல்லீங்க..நாம இருட்டியப் பொழுதின் இனிமைகளில் எப்போதாவது மது னு வேணா வச்சிக்கலாம்…:)

   மறுமொழி
 • 19. prabha  |  9:19 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

  நைனா! நீ சரக்கடிபிய?…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,117 hits

%d bloggers like this: